ஜெகன் மோகனுக்கு அதிகரிக்கும் ஆதரவு !! ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்த நட்சத்திர ஜோடி !!

Published : Apr 01, 2019, 10:33 PM IST
ஜெகன் மோகனுக்கு அதிகரிக்கும் ஆதரவு !! ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்த நட்சத்திர ஜோடி !!

சுருக்கம்

நடிகைகள் ரோஜா மற்றும் ஜெயசுதாவை அடுத்து தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நடிகர் ராஜசேகரும்  அவரது மனைவி நடிகை ஜீவிதாவும்  இணைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு  தேசம் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்த்து கடும் டஃப் கொடுத்து அரசியல் செய்து வருபவர் ஜெகன் மோகன் ரெட்டி. தற்போது ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே நடிகை ரோஜா  ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக கலக்கி வரும் நிலையில், அண்மையில்  நடிகை ஜெயகுதா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் நடிகரும், மருத்துவருமான ராஜசேகர் தனது மனைவி ஜீவிதாவுடன் ஜெகன் மோகன் கட்சியில் இணைந்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகனை சந்தித்து அவர்கள் தங்களை கட்சியில் இணைந்த்துக் கொண்டனர்.

இதையத் தொடர்ந்தும செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஆந்திராவின் அடுத்த முதலமைச்சர் ஜெகன் மோகன் தான் என்றும், மக்களை வசீகரிக்கும் தலைவர் என்றும் பாராட்டிப் பேசினர்.

ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் ராஜசேகர், ஜீவிதா நடித்துள்ளனர். இதுதாண்டா போலீஸ் ராஜசேகருக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்த படமாகும். இவரது தம்பி செல்வாவும் தமிழ்ப் படங்களில் நடித்தவர்தான். இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரியின் மகளைத் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!