வெளிநாட்டிற்கு தப்பியோடிய இன்னொரு குஜராத்தி!! டிவிட் போட்ட சித்தார்த்...

By sathish kFirst Published Sep 24, 2018, 6:36 PM IST
Highlights


பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 15 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ்மோடி வெளிநாட்டுக்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்து வருகிறார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 15 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ்மோடி வெளிநாட்டுக்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த மற்றொரு குஜராத்தி, வெளிநாடு தப்பித்து சென்றுள்ளார்.

குஜராத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தை நடத்தி வருபவர் நிதின் சந்தேசரா. இவர், பல்வேறு  வங்கிகளில் ரூ.5000 கோடி அளவுக்கு கடன் பெற்றுள்ளார். வாங்கப்பட்ட கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை. இதனால், நிதின் சந்தேசரா மீது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தது.

One more Illegal Overseas Gujju! The plan was to bring black money back, right? This is exactly the opposite! The common man is being demonetized :( https://t.co/G0MVYWOuSQ

— Siddharth (@Actor_Siddharth)

நிதின், துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என்றும், குடும்பத்துடன்  நைஜீரியாவுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்னொரு குஜராத்தி சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். நீங்கள் கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வருவதாகத்தானே சொன்னீர்கள். ஆனால், எதிர்மறையாக அல்லவா நடந்து கொண்டிருக்கிறது. இங்கு சாமானியன் பணம் மதிப்பு நீக்கம் செய்யப்படுகிறது என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார். 

click me!