அந்த பக்கம் போலீஸ் இல்லை என்றால் என்ன..!! ஆனா கொரோனா இருக்கும்.. மருத்துவர் சொல்லும் அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 28, 2020, 10:48 AM IST
Highlights


அத்தோடு இன்னும் பல கருதுகோள்களை, இந்த வைரஸ் மெட்டலில், பிளாஸ்டிக்கில் 12 நேரத்திற்கு மேலாக இருப்பதையும், ஆய்வக சோதனையில் வெப்பத்தை தாக்குப்பிடிக்கும் முடிவு இருப்பதனாலும், தங்கள் கணக்கீடை வைத்து "கோடையில் இதன் உக்கிரம் குறையும் என சொல்வதற்கில்லை; 

உலகமே கொரோனா குறித்து நடுங்கி வரும் நிலையில் இந்திய சித்த மருத்துவர்  மருத்துவர் சிவராமன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் விவரம்:-  நேற்றைய முன் தினம் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸின் பல்கலைக்கழகத்தின் நோய்பரவுதல் அதன் பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் பிரிவின் ஆய்வுத்துறையின் (CDDEP) அறிக்கைகள் நமக்கு பல எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது இப்போதிருக்கும் 21 நாள் ஊரடங்கு மிக அவசியமானது .ஆனால், இந்த ஊரடங்கோடு  மட்டும் நோய் நின்றுவிடாது என்பதுதான். இது அவசியம் என்றாலும் "இத்தோடு நோய் போய்விடும்" என அலட்சியமாக இருத்தல் கூடாது எனும் மன நிலை மக்களுக்குக் கூடாது.  ஏப்ரல் 14இல் இந்த ஊரடங்கு முடியும் தருவாயில், கூடவே கடும் பொருளாதார நெருக்கடிச் சூழலில், அவர்களின் தடாலடியான ஓட்டம், அதன்பின் ஆபத்தை கொடுக்க வாய்ப்பு அதிகம் என்கிறது  அவர்களது ஆய்வுகள். இந்த ஊரடங்கு இன்னும் சில வாரங்கள் கூட மக்கள் நன்மை கருதி தொடரவும் கூடும்.  முக்கியமாக, தற்போதைய கணக்கீட்டின் படி, "சமூக பரவலின் வீரியம் மார்ச் 25க்கு மேல் துவங்கும்.  அதிக பட்சமாக 25கோடி மக்களுக்குள் இக்கிருமி செல்லும்", என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். 

இந்த 25 கோடி என்பது, கிருமி கொண்டவர் எல்லாரையும் சேர்த்த தொகை எண். இதில் 85%இனர் தனக்கு கிருமி வந்து போவதை அறியாது இயல்பாய் இருப்பர் என்கின்றார்கள். ஆனால், தீவிர மருத்துவம் தேவைப்படும் நோயாளிகள் ஏப்ரல் 4இல்துவங்கி ஏப்ரல் 25க்குள்  
12 முதல் 25 இலட்சம் வரை இருப்பர் என்கிற செய்திதான் கலவரப்படுத்துகின்றது.  அவர்கள் அத்தனை பேருக்கும் அவசரமாகவும் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம் என அவர்கள் கணிப்பு கூறுகின்றது. ஏப்ரல் 4இல் அப்படியான கலவர எண்ணிக்கை வரக் கூடாது என்றால்,  நாம் வீட்டுக்குள் சுய தடுப்பு ஒதுக்கத்தில் (self quarantine) இருப்பது மட்டுமே வழி.

 கூடவே சற்று ஆறுதலான செய்தியாயிருப்பது,  தட்பவெப்பத்திற்கும் காற்றின் நீர்த்துவத்துக்கும் இந்த வைரஸ் பரவலுக்கும் உள்ள தொடர்பை ஒட்டி நடக்கும் ஆய்வின் முடிவுகள்தாம். வுகானில் துவங்கி, சியாட்டில் வரை சீனம் , ஈரான், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து அமெரிக்காவின் நியூயார்க், சியாட்டில் வரை சில சில நகரங்களில் மெசஷூட்ஸ் இன்ஸ்டிடியூட்(MIT)  நடத்திய ஆய்வில் 18 டிகிரி முதல் 6டிகிரி வரை தட்பவெப்பம்  உள்ள பகுதியில் அத்தோடு காற்றில் குறை நீர்மம் உள்ள பகுதியில் இந்த வைரசின் உச்சகட்ட உக்கிர தாக்குதல் மற்றும் உயிரிழப்பு , புதிய பாதிப்பாளர்கள் அதிகம் உருவாதல் நிறைய நிகழ்கின்றது என்பதை கணக்கிடுகிறார்கள். 

அத்தோடு இன்னும் பல கருதுகோள்களை, இந்த வைரஸ் மெட்டலில், பிளாஸ்டிக்கில் 12 நேரத்திற்கு மேலாக இருப்பதையும், ஆய்வக சோதனையில் வெப்பத்தை தாக்குப்பிடிக்கும் முடிவு இருப்பதனாலும், தங்கள் கணக்கீடை வைத்து "கோடையில் இதன் உக்கிரம் குறையும் என சொல்வதற்கில்லை; இந்திய அனுபவத்தை வைத்துத்தான் இரு முடிவுக்கு வர இயலும்",  என்றும் கூறுகின்றனர். கோடையில் இத்தொற்று குறையும் எனும் கருதுகோளை  WHO இன்னும் ஏற்கவில்லை. இக்கருத்தை மறுக்கும் ஆய்வாளர்கள் இருந்தாலும் சென்னையில் அதிகபட்சம் 35டிகிரியும் குறைந்த பட்சம் 25டிகிரியும் இருக்கும் கோடையில் இப்பரவுதல் குறையக் கூடும் என ஒரு நம்பிக்கையும் பரவலாக உள்ளது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதற்கு முதலில் தனித்திருந்து பார்க்க வேண்டாம். "அதுதான் நம்பர் இன்னும் ஏறலையே கடைக்குப் போய்விட்டு அப்படியே மச்சினனை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாமா? அந்தப்பக்கம் போலீஸ் இல்லையாம்" என்ற பேச்சு வேண்டாம்; காவலர்கள் நீங்கள் போகும் சாலையில் இல்லாமல் இருக்கலாம். கரோனா கண்டிப்பாக இருக்கும்! தனித்திருப்போம்; நாளையை நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம்! என சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் எச்சரித்துள்ளார் 
 

click me!