வீட்டுக்கண்காணிப்பில் இருந்த சப்கலெக்டர் அனுபம் மிஸ்ரா சஸ்பெண்ட்... !! கேரளா அரசு அதிரடி நடவடிக்கை..!!

By Thiraviaraj RMFirst Published Mar 28, 2020, 10:35 AM IST
Highlights

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் துணை ஆட்சியராக இருந்தவர் அனுபம் மிஸ்ரா. இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவர் திருமணம் முடிந்து ஹனிமூன்னுக்காக வெளிநாடு சென்று திரும்பினார். இவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் வீட்டில் இல்லாமல் வெளியே சென்று விட்டார். இதன்காரணமாக அவரை சஸ்பென்ட் செய்திருக்கிறது கேரளா அரசு. 

T.Balamurukan

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் துணை ஆட்சியராக இருந்தவர் அனுபம் மிஸ்ரா. இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவர் திருமணம் முடிந்து ஹனிமூன்னுக்காக வெளிநாடு சென்று திரும்பினார். இவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் வீட்டில் இல்லாமல் வெளியே சென்று விட்டார். இதன்காரணமாக அவரை சஸ்பென்ட் செய்திருக்கிறது கேரளா அரசு. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் மின்னல் வேகமெடுத்து வருகிறது. இத்தாலி,அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் கொரோனா கொத்துக்கொத்தாக மரணத்தை ஏற்படுத்தி பிணங்களை அள்ளிக்கொண்டிருக்கிறது. அப்படியொரு நிலை இந்தியாவில் ஏற்பட்டு விடக்கூடாது என்று மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கொரோனாவை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த பின்னரே அவர்கள் மீதான கட்டுப்பாடுகள் விலக்கப்படுகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் துணை கலெக்டராக பணிபுரிந்து வருபவர் அனுபம் மிஸ்ரா. இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவர் திருமணத்துக்காக விடுமுறையில் இருந்தார்.திருமணம் முடிந்ததும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தேனிலவுக்காக மலேசியா, சிங்கப்பூர் சென்று இருந்தார். கடந்த 19-ந்தேதி அவர் கேரளா திரும்பினார். அப்போது அவருக்கு சோதனை நடத்தியதில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. ஆனாலும் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி கலெக்டர் அப்துல் நாசர் உத்தரவிட்டிருந்தார்.

மிஸ்ராவின் பாதுகாவலர், உதவியாளர் போன்ற ஊழியர்களும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அனுபம் மிஸ்ரா வீட்டுக்கு வியாழக்கிழமை சுகாதார அதிகாரிகள் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை.இந்த தகவல் தெரிந்ததும்
கலெக்டர் நாசர்,முறைப்படி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரது செல்போன் இருக்கும் இடம் பற்றி ஆய்வு செய்தபோது, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருப்பதாக காட்டியது.

ஒரு அரசு அதிகாரி உரிய அனுமதியோ, விடுமுறையோ பெறாமல், யாரிடமும் சொல்லாமல் மாநிலத்தைவிட்டு வெளியில் சென்றதும்,தனிமைப்படுத்தப்பட்டவர் இதுபோன்று நடந்து கொண்டது குறித்து அரசு விளக்கம் கேட்டது. நாடு மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும் நேரத்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்படி நடந்து கொண்டது குற்றம் என்று கருதிய கேரளா அரசு அவரை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது.
 

click me!