துணிச்சல் இருந்தா மு.க.ஸ்டாலினுக்கு நிகரான ஆளைக் காட்டுங்க... அதிமுகவுக்கு தங்க. தமிழ்செல்வன் சவால்..!

Published : Sep 29, 2020, 01:44 PM IST
துணிச்சல் இருந்தா மு.க.ஸ்டாலினுக்கு நிகரான ஆளைக் காட்டுங்க... அதிமுகவுக்கு தங்க. தமிழ்செல்வன் சவால்..!

சுருக்கம்

திமுகவிடம் உள்ள இந்த துணிச்சல் ஊழல் ஆட்சி நடத்துகிற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை என தங்க தமிழ்செலவன் தெரிவித்துள்ளார்.

எத்தனை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டினாலும் அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவே முடியாது என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

 

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் பேசிய தங்க. தமிழ்செல்வன், “எத்தனை செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது, அறிவிக்கும் துணிச்சல் அவர்களிடம் இல்லை. திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும். 

அவரை முன்னிலைப்படுத்தி தான் நாங்கள் பிரச்சாரம் செய்வோம். அவர்தான் அடுத்த முதல்வராக வருவார். இந்த துணிச்சல் ஊழல் ஆட்சி நடத்துகிற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை. அதிமுகவில் துணிச்சலான ஆளும் இல்லாததால் பொதுக்குழு கூடினாலும் செயற்குழு கூட்டினாலும் முதல்வர் வேட்பாளரை அவர்களால் அறிவிக்க முடியாது’’எனத் தெரிவித்துள்ளார். இந்த தங்க.தமிழ்செலவன் அதிமுகவில் அமைச்சராக இருந்தவர். அதிமுக உடைந்தபோது அமமுகவில் இருந்தவர். பின்னர் திமுகவுக்கு கட்சி மாறினார். 

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!