கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது.. ஓபிஎஸ் போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்..

Published : Jul 10, 2021, 09:15 AM IST
கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது.. ஓபிஎஸ் போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்..

சுருக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது, விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராகுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டது.

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் அறிவுருத்தியுள்ளனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது, விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராகுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகளுடன் கூட்டணி தொடர்வதாக அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் மீது பொதுவெளியில்  விமர்சிக்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுருத்தினர். 

விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என சசிகலா அறிவித்துள்ள நிலையில், கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.மேலும் பெற்றோல் டீசல் விலை கட்டுபடுததவேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!