காலையிலேயே முதல்வருக்கு அதிர்ச்சி தகவல்! திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனை சுத்துப்போட்ட வருமான வரித்துறை..!

By vinoth kumar  |  First Published Oct 5, 2023, 7:48 AM IST

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.


சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம்,  தி.நகரில் உள்ள  நட்சத்திர ஓட்டல், குரோம்பேட்டையில் உள்ள எம்.பி.யின் உறவினர் வீடு, வேளச்சேரியில் அவருக்கு சொந்தமாக உள்ள மருத்துவமனை உள்ளிட்ட  70 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பூந்தமல்லியில் உள்ள கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அரசியல் கட்சியினர் யோசிக்க வேண்டும்- பிரேமலதா அதிரடி

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் அவ்வப்போது வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
 

click me!