குடி மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. கடைக்கு 2 நாள் லீவு.

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2021, 2:50 PM IST
Highlights

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதியும் மற்றும் மிலாதுநபியை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை அடைக்க அனைத்து மண்டல மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதியும் மற்றும் மிலாதுநபியை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை அடைக்க அனைத்து மண்டல மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். எனவே அக்டோபர் மாதத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட உள்ளது, இந்த அறிவிக்கு குடி மகன்கள் மத்தியில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆண்டுதோறும் நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும்  அன்றைய தினம் மதுபான கடைகள் மூடப்பட்டு இறைச்சி கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அன்றைய தினம் மகாத்மா காந்தியின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்-2 அன்று டாஸ்மாக் கடைகள்  அடைக்கப்படுவது வழக்கம்,அந்த வகையில் இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் கடைகள் மற்றும் உரிமை பெற்ற பார்கள் மூடவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருப்பதை அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் விதிகளை மீறி கடைகள் இயங்கினாலும் அல்லது மறைமுகமாக மது விற்பனை செய்தாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

click me!