சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம், 26 கிலோ வெள்ளி.. அறநிலைத்துறை அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2021, 2:17 PM IST
Highlights

இந்த திட்டத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் 26 கிலோ வெள்ளி இருப்பதாக இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது. அனைத்து திருக்கோயில்களிலும், உண்டியலில் கிடைக்கப்பெற்ற பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகளின் அளவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. கோயில்களில் பயன்படுத்தப்படாத பழைய, சேதமடைந்த தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகள் அத்துறையின் அமைச்சரால் எடுக்கப்பட்டு வருகிறது. 

கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 600 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவித்து இந்து சமய அறநிலைத்துறை அதிரடி காட்டியுள்ளது. அறநிலைத்துறையின் நடவடிக்கைகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த வரிசையில் கோயில்களில்  பயன்பாடற்ற நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் வைத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலைத்துறை அமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் 26 கிலோ வெள்ளி இருப்பதாக இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது. அனைத்து திருக்கோயில்களிலும், உண்டியலில் கிடைக்கப்பெற்ற பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகளின் அளவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016ல் தங்க நகைகளின் விவரம் குறித்து ஆய்வு செய்த நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து கடந்த 15ம் தேதி தங்கம், வெள்ளி நகை பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன.அந்த வகையில், கடந்த 2016ல் வெள்ளி மறுமதிப்பீடு செய்யும் போது, உண்டியல் மற்றும் காணிக்கையாக வந்த 17 கிலோ 413 கிராம் வெள்ளியும், கடந்த 15ம் தேதி மறுமதிப்பீட்டிற்கு பிறகு 9 கிலோ 301 கிராம் என மொத்தம் 26 கிலோ 714 கிராம் வெள்ளி இருப்பதாகவும், அதேப்போல், கடந்த 2005 மறு மதிப்பீடு செய்யும் போது 8 கிலோ 217 கிராம் தங்கம், 2016ல் மதிப்பீடு செய்யும் 10 கிலோ வெள்ளி 096 கிராம் தங்கமும், கடந்த 15ம் தேதி வரை 2 கிலோ 487 கிராம் என மொத்தம் 20 கிலோ 800 கிராம் தங்கம் இருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

click me!