ஷாக் மேல் ஷாக்... மண்ணைக் கவ்வப்போகும் விஐபி வேட்பாளர்கள்... இப்படியொரு ட்விஸ்டா..!??

By Thiraviaraj RMFirst Published May 2, 2021, 1:56 PM IST
Highlights

பலராலும் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர்களாகவும், கட்சியின் முக்கிய வேட்பாளர்களாக இருந்த பலரும், பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

பலராலும் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர்களாகவும், கட்சியின் முக்கிய வேட்பாளர்களாக இருந்த பலரும், பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் 6371 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி. ராமு முன்னிலையில் உள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதுவரை பாஜக வேட்பாளர் குஷ்பு 6,772 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். ஆனாலும் இருவருக்கும் ஆன வாக்கு வித்தியாசம் நூறுக்குள் மட்டுமே இருக்கிறது. பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் முன்னிலையில் உள்ளார்.

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி முன்னிலையில் உள்ளார். ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளாராக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார் பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மூர்த்தி முன்னிலையில் உள்ளார். சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளாராக போட்டியிட்ட அமைச்சர் ராஜலெட்சுமி பின்தங்கியுள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ஈ.ராஜா முன்னிலையில் உள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பின்தங்கியுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் 9066 வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கி உள்ளார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பின்னடவை சந்தித்துள்ளார்.

click me!