இது அதிமுக (அ) திமுக கோட்டை.. மற்றவங்களுக்கு சங்குதான்.. பாடம் கற்பிக்கும் தேர்தல் ரிசல்ட்.

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 1:42 PM IST
Highlights

தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 141 இடங்களிலும், அதிமுக கூட்டணி 90  இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதே நேரத்தில் அமமுக 2 சட்டமன்ற தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்ற தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 1 தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்றாலும், அக்கட்சி தொடர்ந்து பல இடங்களில் 3வது இடம் வகித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 141 இடங்களிலும், அதிமுக கூட்டணி 90  இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதே நேரத்தில் அமமுக 2 சட்டமன்ற தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்ற தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 1 தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்றாலும், அக்கட்சி தொடர்ந்து பல இடங்களில் 3வது இடம் வகித்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தமிழகம் முழுவதும் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழகத்தில் 173 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 14 கூட்டணிக் கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர், ஆக மொத்தத்தில் திமுக 187 இடங்களில் உதயசூரியன் சின்னம் போட்டியிட்டது. 

காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு  தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா 3  தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதேபோல் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஃபார்வார்ட் பிளாக்,மக்கள் விடுதலை கட்சி ஆகியவைகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  அதில் ஆரம்பம் முதலே திமுக கூட்டணி முண்ணிலை வகித்து வருகிறது. 173 இடங்களில் போட்டியிட்ட திமுக  தற்போது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 114 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

 திமுக கூட்டணியில் மொத்தம் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆறு இடங்களில் போட்டியிட்ட அதிமுக 3 தொகுதிகளிலும், அதே ஆறு இடங்களில் போட்டியிட்ட சிபிஎம் 2 தொகுதிகளிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ 2 தொகுதிகளிலும், அதே போல 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி  3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இன்னும் பிற கட்சிகள் 2 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதேபோல அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளிலும், பாஜகவுக்கு 20 சட்டமன்ற  தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 6 சட்டமன்ற தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி,  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. மொத்தத்தில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டன. (கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 55 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது) 

இந்நிலையில் 179 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக பிற்பகல் 1 மணி நிலவரப்படி 80 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 23 தொகுதிகளில் களமிறக்கிய பாமக வெறும் 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 6 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட முன்னிலை  இல்லை. அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் 1 தொகுதியில் முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதேபோல மக்கள் நீதி மையம் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் மக்கள் நீதி மையம் 144 தொகுதிகளிலும், ஐஜேகே 40 சட்டமன்ற தொகுதிகளிலும்,  ச.ம.க 37 சட்டமன்ற தொகுதிகளிலும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 10 சட்டமன்ற தொகுதிகளிலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த கூட்டணியை பொறுத்தவரையில் மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் கமல்ஹாசன் மட்டும் கோவை தொற்று தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.  

அதேபோல டிடிவி தினகரன் தலைமையில் அமமுக 161 இடங்களிலும், அக்கூட்டணியிர் தேமுதிக 60 சட்டமன்றத் தொகுதிகளிலும், இந்திய சமூக ஜனநாயக கட்சி 6 சட்டமன்ற தொகுதிகளிலும், அனைத்திந்திய மஜ்லிசே இத்திகா துல் முசுலிமீன் 3  சட்டமன்ற தொகுதிகளிலும்,கோகுல மக்கள் கட்சி 1 சட்டமன்றத் தொகுதியிலும், மருது சேனை சங்கம் 1, விடுதலை தமிழ் புலிகள் கட்சி 1, மக்கள் அரசு கட்சி 1  தொகுதியிலும் போட்டியிட்டன. இக்கூட்டணியை பொறுத்தவரையில் இதுவரை அமமுக போட்டியிட்ட 1 தொகுயில் மட்டும் முன்னிலையில் இருந்து வருகிறது. 

தோல்வியைக் கண்டு கொஞ்சமும் சலிக்காத சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது. இந்த முறையில் இந்த கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. ஆனால் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் வகித்து வருகிறது. அக்கட்சிக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. 

தேர்தலுக்குப் பின்னர் அதிமுக என்ற கட்சியை இருக்காது என்றும், இந்த தேர்தலே திமுகவிற்கு கடைசி தேர்தல் என்றும் தமிழகத்தில் பல கட்சிகள் முழங்கி வந்தன. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான், திராவிட கட்சிகளின் சகாப்தம் இந்த தேர்தலுடன் முடிந்துவிட்டது என மேடைதோறும் முழங்கி வந்தார். பாஜகவும் தன் பங்குக்கு இது பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண் என கூறியதுடன், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் திருட்டு திராவிடத்தை விரட்டியடிப்போம் என கூறி வந்தது. ஆனால் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள்  மீண்டும் தமிழகத்தில் அதிமுக - திமுகவுக்கே இடம் என்பதை நிரூபித்துள்ளது. திராவிடக்கட்சிகளை ஒழிப்போம், திராவிட கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று வாய்கிழிய பேசியவர்களின் தலையில் மண் விழுந்துள்ளதையே இந்த தேர்தல் ரிசல்ட் காட்டுகிறது. 

 

click me!