சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட 11 முக்கிய அமைச்சர்கள் பின்னடைவு.. அதிர்ச்சியில் அதிமுக..!

By vinoth kumarFirst Published May 2, 2021, 1:34 PM IST
Highlights

சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு சுற்றுகள் முடிவில் அதிமுகவில் 15 அமைச்சர்கள் முன்னிலையிலும், 11 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக காலை முதல் நடைபெற்று வருகிறது. பல்வேறு சுற்றுகள் முடிவில் அதிமுகவில் 15 அமைச்சர்கள் முன்னிலையிலும்,  11 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி திமுக கூட்டணி 142 இடங்களிலும், அதிமுக கூட்டணி 91 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது. இதில் திமுக மட்டும் 116 தொகுதிகளில் தனித்து முன்னிலை வகித்து வருகின்றன. ஆட்சியமைக்குத் தேவையான 118 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அமைச்சர்களில் பெரும்பாலானோர் முன்னிலையில் உள்ளனர்.  10 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்திக்கின்றனர். 

முன்னிலை பெறும் அமைச்சர்கள்

எடப்பாடி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன், கோபிச்செட்டிப்பாளையம் - செங்கோட்டையன், மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ, குமாரபாளையம்- தங்கமணி, தொண்டாமுத்தூர் - வேலுமணி, பாலக்காடு - கே.பி.அன்பழகன், வேதாரண்யம்- ஓ.எஸ்.மணியன், உடுமலைப்பேட்டை - கே.ராதாகிருஷ்ணன், பவானி- கருப்பணன், திருமங்கலம்- ஆர்.பி.உதயகுமார், கோவில்பட்டி - கடம்பூர் ராஜூ, விராலிமலை- விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர் முன்னிலையில் பெற்றுள்ளனர். 

பின்னடைவு சந்திக்கும் அமைச்சர்கள்

ராயபுரம்  - டி.ஜெயக்குமார், விழுப்புரம்  - சி.வி.சண்முகம், கடலூர்  - எம்.சி.சம்பத், நன்னிலம்  - காமராஜ், மதுரவாயல் - பெஞ்சமின், ஆவடி  - பாண்டியராஜன், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், சங்கரன்கோவில் - வி.எம்.ராஜலட்சுமி, ராஜபாளையம் - ராஜேந்திர பாலாஜி, ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இந்த தொகுதிகளில் எல்லாம் ஆளும் தரப்பு மீதான அதிருப்தியும், கோபமும்தான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

click me!