வாடகைதாரர்களுக்கு அதிர்ச்சி... வீட்டு உரிமையாளர்களுக்கு குஷியோ குஷி... மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Aug 27, 2020, 6:30 PM IST
Highlights

இப்போது வாடகைதாரர்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக வீட்டு உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு புதிய வரைவு சட்டத்தை கொண்டு வரவுள்ளது. 

வீட்டு வாடகை தொடர்பான புதிய வரை மாதிரி சட்டத்தை இன்னும் ஒரு மாதத்தில் வெளியிட இருப்பதாக மத்திய வீட்டு வசதி வாரியத் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகைதார்களிடம் கறாராக நடந்து கொள்கிறார்கள். எந்த வகையான சட்டவிதிகளையும் வீட்டு உரிமையாளர்கள் காதில் போட்டுக்கொள்வதில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம் கொரோனா காலத்தில் வாடகைதாரர்கள் வேலைக்கு ச்ல்ல முடியாமல், அன்றாட பிழைப்பிற்கே திண்டாடி வந்தனர். இது தொடர்பாக 2 மாத வாடகையை வசூலிக்கக்கூடாது என அரசு உத்தரவு போட்டது. ஆனாலும், வீட்டு உரிமையாளர்கள் பலர் அதனை மதிக்கவில்லை. 

வாடகையை வசூலிக்கவே செய்தனர். பின்னர் அரசும் இந்த விவகாரத்தில் பெரிதாக அக்கறைகாட்டவில்லை. இதனால் வாடகை செலுத்த முடியாத பலரும் வீட்டை காலி செய்து விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கே சென்றனர். சட்டவிதிகளை வீட்டு உரிமையாளர்கள் மதிப்பதே இல்லை. ஆனால் வாடகைதாரர்களுக்கு விதிக்கபட்ட வரைமுறைகளை மதித்தே ஆக வேண்டிய கட்டயம் உள்ளது. இப்போது வாடகைதாரர்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக வீட்டு உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு புதிய வரைவு சட்டத்தை கொண்டு வரவுள்ளது. 
 
இது தொடர்பாக  டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் துர்கா சங்கர் மிஸ்ரா, தற்போது பல்வேறு மாநிலங்கள் கடைபிடித்து வரும் வீட்டு வாடகை தொடர்பான சட்டங்கள் வாடகைக்கு குடியிருப்போருக்கு பெரும்பாலும் சாதகமானதாக இருந்து வருரிகிறது. அச்சம் காரணமாக ஒரு கோடியே 10 லட்சம் வீடுகள் வாடகைக்கு விட படாமல் இருக்கின்றனர். மத்திய அரசு உருவாக்கும் புதிய மாதிரி வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்போர் இரு தரப்பையும் சமமாக பாவிக்கும் வகையில் இருக்கும். இந்த மாதிரி சட்ட அடிப்படையில் மாநிலங்கள் தங்கள் வாடகை வீடு தொடர்பான சட்டங்களை திருத்திக் கொள்ளலாம்’’என்று அவர் கூறினார்.

click me!