சிவசேனா தலைவர் மீது துப்பாக்கி சூடு.!லூதியானாவில் பரபரப்பு..!!

Published : Mar 10, 2020, 07:22 AM IST
சிவசேனா தலைவர் மீது துப்பாக்கி சூடு.!லூதியானாவில் பரபரப்பு..!!

சுருக்கம்

சிவசேனா தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அதிர்ஷ்டவடமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் லூதியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

T.Balamurukan

சிவசேனா தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அதிர்ஷ்டவடமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் லூதியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலம், லூதியானா அருகே காண்ணா பகுதியை சேர்ந்தவர் காஷ்மீர் கிரி. இவர் சிவசேனா தலைவராக இருக்கிறார். அங்குள்ள கோவிலில் சாமியாராகவும் இருக்கிறார்.. கோவிலின் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர்,நேற்று காலை மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், காஷ்மீர் கிரியை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். அந்த சமயத்தில் காஷ்மீர் கிரி பூஜை பொருட்கள் எடுத்து வர வீட்டிற்குள் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கோவில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்மநபர்களை போலீசார்  தேடி வருகிறார்கள். சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!