தாத்தானு தான் சொன்னாங்க..அந்த தாத்தா "நான் தான்னு" சொல்லல...அசால்டா அள்ளிவிடும் ஆளுநர்...!

Asianet News Tamil  
Published : Apr 17, 2018, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
தாத்தானு தான் சொன்னாங்க..அந்த தாத்தா "நான் தான்னு" சொல்லல...அசால்டா அள்ளிவிடும் ஆளுநர்...!

சுருக்கம்

she said the word thatha bit i am not that thatha said banwarilal

தாத்தானு தான் சொன்னாங்க..அந்த தாத்தா "நான் தான்னு" சொல்லல... அசால்டா அள்ளிவிடும் ஆளுநர்...!

கல்லூரி மாணவிகளை 'உயர் அதிகாரிகளின்' பாலியல் தேவைக்கு பயன்படுத்த  முயற்சி செய்வதாக வந்த புகாரை அடுத்து பேராசிரியர் நிர்மலா கைது செய்யப்பட்டு  உள்ளார்.

மேலும் அவரது உரையாடலில்,தமிழக ஆளுநர் பெயர் நடுவில் பட்டும் படாமலும்  அடிபடவே, இந்த விவகாரம் மேலும் சூடு  பிடிக்க தொடங்கியது. இது குறித்து  இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த ஆளுநர்...

நிர்மலா தேவி நிகழ்த்திய  உரையாடலின் நடுவே, தாத்தா என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார்.இவர் இந்த இடத்தில் தாத்தா என குறிப்பிட்டு உள்ளது,ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை தான் குறிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர்,தாத்தானு தான் சொன்னாங்க.அந்த தாத்தா "நான் தான்னு" சொல்லல..என தெரிவித்து  உள்ளார்.

மேலும்,எத்தனையோ பட்டமளிப்பு விழாவில் பங்குபெறுகிறேன்.அப்போது மேடையில்  இங்கும் அங்கும் பலர் நடக்கின்றனர்..அதற்கு கூட நான் பொறுப்பாக முடியாது என சற்று கிண்டலாகவும்  பதில் அளித்துள்ளார் பன்வாரிலால்.

மேலும்,குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி, எனக்கு யாரென்றும் தெரியாது..அவரை நேரில் கூட பார்த்தது கிடையாது எனவும் தெரிவித்து உள்ளார்.

 இந்த விவகாரம்  பொறுத்தவரை,உண்மை வெளிப்படும் என தமிழக மக்களுக்கு நான்  உறுதியாக கூறுகிறேன் எனவும் தெரிவித்து உள்ளார் பன்வாரிலால் புரோகித்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!