பாலியல் சீண்டல் அதிகரித்து விட்டது.. இதமட்டும் செய்யுங்க.. தலையில் அடித்து அலறும் கிருத்திகா உதயநிதி.

By Ezhilarasan BabuFirst Published Jan 22, 2022, 2:38 PM IST
Highlights

பெண் குழந்தைகள் கல்வி என்பது மிகமுக்கியமான ஒன்று என்றும், ஒரு பெண் படித்தால் மட்டுமே அவளுடைய குடும்பத்தை நல்வழியில் எடுத்துச்செல்ல முடியும் என்றார். 

பள்ளிகளில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகளின் பிரச்சினைகளை பெற்றோர்கள் காதுகொடுத்து கேட்கவேண்டும் என்றும், அப்படி செய்தாலே பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியும் என்றும்  கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் பாலியல் சீண்டல் பாலியல் வன்முறை போன்ற காரணங்களால் பள்ளி  மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம், 12 வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை போன்ற செய்திகள் அடிக்கடி வருவதை காண முடிகிறது. இது போன்ற செய்திகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்தும் உள்ளது. இதை ஆராய்ந்தால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் ஆசிரியர்களின் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதும் பின்னர் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தெரியவருகிறது. சமீபத்தில் கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் கொடுத்த தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இது தொடர்பாக தமிழக அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மாணவிகளை குறிவைத்து ஆசிரியர்கள் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவது, பாலியல் உணர்வை தூண்டும் வகையில் மாணவிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, ஆசிரியர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி மாணவிகளை தவறான உறவுக்கு அழைப்பது தொடர்பான பல்வேறு வீடியோ, ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாங்காட்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சேகத்தை ஏற்படுத்தியது. அந்த மாணவி எழுதி வைத்த கடிதத்தில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் மட்டுமே என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். அந்த  வார்த்தை இதயம் உள்ள ஒவ்வொருவரையும் அடித்து நொறுக்குவதாக இருந்தது.

படித்து உயர்ந்த இடத்திற்கு வளர வேண்டிய மாணவிகள்  பாலியல் சீண்டல்களால் படிக்கும் போதே வாழ்வை முடித்துக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படும் அளவுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இதை ஒழிப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை என்றும் பாலியல் சீண்டல் வயதுவரம்பின்றி நடக்கிறது என்றும், 8மாத குழந்தைக்கு முதல் 80 வயது கிழவிகள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் சமூகத்தில் அபயக்குரல் எழுகிறது. இதை ஒரு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர், இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒன்றில் கலந்து கொண்ட கிருத்திகா உதயநிதி பெண் பிள்ளைகள் பாதுகாப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், சைல்டு அடோலெசென்ட் பவுண்டேஷன் இந்தியா என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருத்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், பிள்ளைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது என்றார்.

பிள்ளைகளின் விருப்பத்தை தெரிந்து அவர்களை வளர்க்க வேண்டும் என்றும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு யோகா, விளையாட்டு போன்ற ஆற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதன்மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிருத்திகா கூறுகையில், பெண் குழந்தைகள் கல்வி என்பது மிகமுக்கியமான ஒன்று என்றும், ஒரு பெண் படித்தால் மட்டுமே அவளுடைய குடும்பத்தை நல்வழியில் எடுத்துச்செல்ல முடியும் என்றார். மேலும் பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக கூறிய அவர், பள்ளிகளில் குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றும், அதுபோன்று பெற்றோர்கள் கேட்டகாததால் தான் குழந்தைகள் தவறான முடிவுகளை எடுப்பதாக கூறினார்.
 

click me!