பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் பாரிக்கர் மகன்.. பனாஜியில் சுயேட்சையாக போட்டி.. இனிமேல்தான் இருக்கு

By Ezhilarasan BabuFirst Published Jan 22, 2022, 1:48 PM IST
Highlights

மனோகர் பாரிக்கரின் கோட்டையான பனாஜியில்  தனக்கு சீட் வழங்க வேண்டும் என உத்பல் பாரிக்கர் கேட்டிருந்தார், ஆனால் அந்த தொகுதி அடானாசியோவுக்கு  வழங்கப்பட்டது, இதனால் அவரை வேறு இடத்தில் போட்டியிடுமாறு பாஜக தலைமை கேட்டுக்கொண்டது, ஆனால் உத்பல் அதை மறுத்துவிட்டார்.

மறைந்த கோவா மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள்  ராணுவ அமைச்சருமான மனோகர் பாரிக்கர் மகன் பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.  பனாஜியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். பாஜக சார்பில் பனாஜியில் போட்டியிட உத்பல் பாரிக்கருக்கு பாஜக சீட் வழங்க மறுத்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரின் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.  

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. கோவாவில் 40 தொகுதிகளுக்கு வரும் பிப்- 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கே திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளதால் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாஜக கோவா மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவாக அக்காட்சியை கட்டமைத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும்மான மறைந்த மனோகர் பாரிக்கர் ஆவார். கோவா மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்தார் அவர். கோவாவில் பாஜக என்றாலே அது மனோகர் பாரிக்கர்தான் என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு ஆதி முதலே கண்ணும் கருத்துமாக கோவாவில் பாஜகவை வளர்த்தார் அவர். 

ஆனால் துரதிஸ்டவசமாக அவர் மறைந்தார், அதன் பிறகு அவரின் அரசியல் வாரிசாக அவரது மகன் உத்பல் பாரிக்கர் கட்சிப் பணிகளை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்திற்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் கோவா தலைநகர் பனாஜியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். உத்பல்க்கு நிச்சயம் சீட்டு வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் கோவா சட்டமன்ற தேர்தலுக்கான 34 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று முன்தினம் அறிவித்தது. அதில் உத்பால் பாரிக்கரின் பெயர் இல்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டியலை வெளியிட்ட தேவேந்திர பட்னாவிஸ் உத்பல் பாரிக்கர்வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,  நாங்கள் முன்வைக்கும் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறோம் என டுவிஸ்ட் வைத்து பேசினார். 

மனோகர் பாரிக்கரின் கோட்டையான பனாஜியில்  தனக்கு சீட் வழங்க வேண்டும் என உத்பல் பாரிக்கர் கேட்டிருந்தார், ஆனால் அந்த தொகுதி அடானாசியோவுக்கு  வழங்கப்பட்டது, இதனால் அவரை வேறு இடத்தில் போட்டியிடுமாறு பாஜக தலைமை கேட்டுக்கொண்டது, ஆனால் உத்பல் அதை மறுத்துவிட்டார். இந்நிலையில்தான் உத்பல் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பட்னாவிஸ் தெரிவித்தார். ஆனால் பானாஜி என்பது வெறும் தேர்தல் அல்ல அது எங்களின் கௌரவம் என உத்பலின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். பானாஜியில் 4 முறை வெற்றிபெற்று பாரிக்கர் அந்த தொகுதியை தனது அசைக்க முடியாத கோட்டையாக வைத்திருந்தார் என்பதுதான் அதற்கு காரணம். இந்நிலையில் பாஜக உத்பலுக்கு பனாஜியை ஒதுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்து வந்தது, உத்பலும் போட்டியிட்டால் பனாஜியில்தான் போட்டியிடுவேன் என்பதில் பிடிவாதமாக இருந்து வந்தார். 

இந்நிலையில்தான் உத்பல் பாஜகவில் இருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார். இந்நிலையில்தான் நேற்று வெள்ளிக்கிழமை பாஜகவில் இருந்து விலகுவதாகவும் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். பனாஜி மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் தனது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பார்கள் என்றும் அப்போது அவர் கூறினார். கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் பாஜகவுக்கு தொழிலாளர்கள் மற்றும் மக்கள் ஆதரவு இருக்கிறது என கூறிய அவர், ஆனால் தனக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லையே என்றார்.  ஆனால் பனாஜி தொகுதியில் அனைத்து  கட்சிகளின் ஆதரவும் தனக்கு உள்ளது, பனாஜி மக்களின் ஆதரவும்  தன் தந்தையைப் போலவே தனக்கும் உள்ளது என அவர் கூறினார். இதை தனது கட்சிக்கு நம்பவைக்க தன்னால் முடிந்த அளவு முயற்சிகளை செய்து விட்டதாகவும் உத்பல் கூறினார்.  மக்கள் ஆதரவு இருந்தும் பாஜக சார்பில் பனாஜியில் தன்னால் வேட்பு மனு தாக்கல் செய்ய  முடியாத நிலை ஏற்பட்டது என்ற அவர்,  கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்சிக்கு வந்த ஒருவருக்கு பனாஜி தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது, அதனால்தான் எனது அரசியல் தலைவிதியை பாலாஜி மக்கள் தீர்மானிக்கட்டும் என்று நான் முன்னோக்கி செல்ல விரும்புகிறேன் என அவர் கூறினார். 

பனாஜியில் பாரிக்கரின் மகன் உத்பலுக்கு பாஜக சீட் வழங்க மறுத்த நிலையில் உத்பல் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பனாஜியில் போட்டியிடலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது உத்பல் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். உத்பல் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இருந்து வெளியேறுவது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அவர் விலகுவார் என பாஜகவில் எவரும் எதிர்பார்க்கவில்லை. இது குறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், உத்பல் நாங்கள் கொடுத்த  வாய்ப்பை ஏற்பார் என்று  நினைத்தோம், எப்போதும் மனோகர் பாரிக்கர் குடும்பத்திற்கு பாஜக மரியாதை அளித்து வருகிறது என அவர் கூறியுள்ளார். 
 

click me!