அன்புமணியை கேள்வி கேட்டு செம்மலையிடம் குத்து வாங்கியவர் திமுகவுக்கு ஓட்டம்..!

Published : Apr 04, 2019, 05:41 PM IST
அன்புமணியை கேள்வி கேட்டு செம்மலையிடம் குத்து வாங்கியவர் திமுகவுக்கு ஓட்டம்..!

சுருக்கம்

அன்புமணியை எதிர்த்து கேள்வி கேட்டதால் எம்எல்ஏ செம்மலையால் ஓங்கி கன்னத்தில் குத்துவாங்கிய அதிமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அன்புமணியை எதிர்த்து கேள்வி கேட்டதால் எம்எல்ஏ செம்மலையால் ஓங்கி கன்னத்தில் குத்துவாங்கிய அதிமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன. மக்களவை, 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் அனல் கிளப்பி வருகின்றன. இந்நிலையில், பாமக சார்பில் தருமபுரியில் போட்டியிடும் அன்புமணி சேலம் மாவட்டம் மோச்சேரி அருகே சிந்தாமணியூரில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பிரசாரம் செய்தார். அப்போது அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செம்மலை உடனிருந்தார். 

அப்போது பிரசாரத்தின் இடையே அதிமுக தொண்டர் ஒருவர் அன்புமணியை பார்த்து 5 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த செம்மலை, கேள்வி கேட்ட நிர்வாகியின் வாயில் குத்து விட்டதோடு அவரை தாக்கினார். இதையடுத்து போலீஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரை பாமக தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர்.

அப்போது அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ செம்மலை தாக்கிய அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?