வாயை திறந்தால் அவ்வளவு தான்... மு.க. ஸ்டாலினை லெப்ட், ரைட் வாங்கிய நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Apr 4, 2019, 5:07 PM IST
Highlights

கோடநாடு விவகாரம் தொடர்பாக பிரச்சாரத்தின் போது தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்கிற்கான தடையை நீக்க வேண்டியிருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடநாடு விவகாரம் தொடர்பாக பிரச்சாரத்தின் போது தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்கிற்கான தடையை நீக்க வேண்டியிருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற அடுத்தடுத்து நடைபெற்ற கொலை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய தகவலை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அவதூறு வழக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் கோடநாடு விவகாரம் குறித்து பேச தடை விதித்தது. 

ஆனால், கோடநாடு விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தார். நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட ஸ்டாலின் இதுகுறித்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஸ்டாலின் கோடநாடு குறித்து தொடர்ந்து பேசினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து பேசுவது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். கோடநாடு விவகாரம் பற்றி தொடர்ந்து பேசி வந்தால், அவதூறு வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து ஸ்டாலின் பேச விரும்பினால் அவர் வழக்கு விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும நீதிபதி கண்டிப்புடன் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

click me!