அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடைவதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலமான 2011 முதல் 2015வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து செந்தில் பாலாஜி மீது பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர். பல கட்டங்களை கடந்த வழங்கு விசாரணையில் இரண்டு மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
undefined
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை
அங்கு செந்தில் பாலாஜிக்கு இருதய பகுதியில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அப்போது மருத்துவமனைக்கே வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செந்தில் பாலாஜியை 14 நாட்கள் நீதிமன்ற காவலவில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி 8 நாட்கள் விசாரணை நடத்தவும் அனுமதி அளித்தார். ஆனால் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக செந்தில் பாலாஜியை விசாரணை நடத்த முடியாமல் அமலாக்கத்துறை திணறியது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி முன்பு ஆஜராகும் செந்தில் பாலாஜி
இதனிடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து இன்றோடு 14 நாட்கள் முடிவடைவதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போது தான் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ததால் நேரில் ஆஜராக முடியாத நிலை உள்ளது. இதனையடுத்து செந்தில் பாலாஜியை காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பாக ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.
இதையும் படியுங்கள்
செந்தில் பாலாஜி வாய் திறந்தால் பலருக்கு எமகண்டம்..! திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஜெயக்குமார்