செந்தில் பாலாஜி வாய் திறந்தால் பலருக்கு எமகண்டம்..! திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஜெயக்குமார்

Published : Jun 28, 2023, 08:22 AM IST
செந்தில் பாலாஜி வாய் திறந்தால் பலருக்கு எமகண்டம்..! திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஜெயக்குமார்

சுருக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் பலருக்கு எமகண்டம் என தெரிவித்துள்ள ஜெயக்குமார். செந்தில் பாலாஜி உடல்நிலை நலமாகி அனைவரையும் அமலாக்கத்துறையிடம் மாட்டிக்கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி கைது

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை பல கட்டங்களை கடந்த பிறகு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து கைதும் செய்தது. இந்தநிலையில் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

 செந்தில் பாலாஜி வாய் திறந்தால் அவ்வளவு தான்

நீதிமன்ற அனுமதியோடு தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுகவில் பல பேருக்கு எம கண்டம், முக்கால் வாசி பேர் ஜெயலுக்கு போவாங்க, எனவே செந்தில் பாலாஜி உடல்நிலை நன்றாக வேண்டும். அப்போது தான் அமலாக்கத்துறை விசாரணையில் எல்லாரையும் மாட்டி விடுவார். அனைவரும் ஜெயிலுக்கு போவர்கள். அதைத்தான் நாங்கள் எதிர்பார்ப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!