திமுகவுக்கு கூட்டி வந்தவரையே எட்டித்தள்ளிய செந்தில் பாலாஜி... அரண்டு தவிக்கும் திமுக சீனியர்கள்..!

Published : Jul 10, 2019, 10:56 AM IST
திமுகவுக்கு கூட்டி வந்தவரையே எட்டித்தள்ளிய செந்தில் பாலாஜி... அரண்டு தவிக்கும் திமுக சீனியர்கள்..!

சுருக்கம்

செந்தில் பாலாஜி பற்றி யாராவது பேச்சை எடுத்தாலே, 'அட விடுங்கப்பா... திறமை இருக்கிறவங்க, முன்னேறிட்டு போகட்டும்' என விரக்தியாக சொல்லி வருகிறாரம் கே.என்.நேரு.

செந்தில் பாலாஜியின் அரசியலால் மத்திய மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் அரண்டு போய் கிடக்கிறார்கள். கட்சிக்குள் வந்து சில மாதங்களிலேயே சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு முக்கியப்புள்ளி ஆகிவிட்டார் செந்தில் பாலாஜி.
 
ஆரம்பத்தில் திமுகவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அடுத்து அதிமுகவில் இணைந்து சீனியர்களுக்கே தண்ணீர் காட்டிவிட்டு போக்குவரத்து துறை அமைச்சரானார். இவரது செல்வாக்கால் தம்பித்துரை போன்ற சீனியர்களே ஆட்டம் கண்டு விட்டனர். அரம் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது முதலமைச்சர் பதவிக்கே காய் நகர்த்தியவர் இந்த செந்துல் பாலாஜி. இதனை உணர்ந்து கொண்ட சீனியர்கள் அவரை ஓரம் கட்ட ஒன்று திரண்டனர்.

ஜெயலலிதா செந்திலை ஓரம்கட்டினார். ஜெயலலிதா மறைந்த பின் அ.ம.மு.க.வுக்கு தாவினார். மீண்டும் ஆரம்பப் புள்ளியான திமுகவுக்கு மாறி அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., வாகவும் ஆகிவிட்டார் செந்தில் பாலாஜி. இவரை, தி.மு.க.,வுக்கு கொண்டு வந்தது, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு தான்.

ஆரம்பத்தில் கே.என்.நேருவிடம் பவ்யமாக நடந்து கொண்ட செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., ஆனதும் தனது ஆட்டத்தை காட்டி வருகிறார். மு.க.ஸ்டாலின், உதயநிதியிடம் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டதால் செந்தில்பாலாஜி கே.என்.நேருவை கண்டு கொள்வதே இல்லை எனக் கூறப்படுகிறது.
 
சமீபத்தில் அவரது கரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு கூட, திண்டுக்கல்லை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சக்கரபாணி போன்றோரை சிறப்பு அழைப்பாளர்களாக மட்டுமே அழைத்திருந்தார். கூட்டி வந்த கே.என்.நேருவை அழைக்கவில்லை. இப்போதெல்லாம் செந்தில் பாலாஜி பற்றி யாராவது பேச்சை எடுத்தாலே, 'அட விடுங்கப்பா... திறமை இருக்கிறவங்க, முன்னேறிட்டு போகட்டும்' என விரக்தியாக சொல்லி வருகிறாரம் கே.என்.நேரு. 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!