
எடப்பாடிக்கு எதிரான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பலர் டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்திவரும் நிலையில் தற்போது செந்தில் பாலாஜியும், தோப்பு வேங்கடச்சலமும் சந்தித்துள்ளனர்.
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் கடந்த சில தினங்களாக தங்கள் ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக ஆலோசனை நடத்தி வந்தனர்.
இதற்கு காரணம் சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியபோது எப்பாடு பட்டாவது எடப்பாடியை முதலமைச்சராக தேர்வு செய்து விட வேண்டும் என எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்கவைத்தனர்.
அப்போது எடாப்படி ஆட்சி வந்தால் உங்களுக்கு தேவையானதை அவர் செய்வார் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எடபாடிக்கு வாக்கு அளித்தனர்.
இதைதொடர்ந்து கூவதூரில் வாக்களித்தவற்றை எடப்பாடி அரசு செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி சில நாட்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 8 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வந்த செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் உடனே எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து இரட்டை இலை விவகாரத்தில் சிறைக்கு சென்று ஜாமீனில் திரும்பிய தினகரனை அவரது ஆதரவு எம்.ஏலே.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு மோகன், பரமக்குடி முத்தையா, ராஜன் செல்லப்பா, பழனியப்பன் ஆகியோர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரவித்துள்ளனர்.
இதுவரை டிடிவி தினகரனுக்கு 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். இதனால் எடப்பாடி ஆட்சி கவிழும் நிலையில் கோட்டை தகர்ந்து கொண்டே போகிறது.