கை கடிகாரத்தின் பில்லை இன்று மாலைக்குள்ளாவது வெளியிடுவாரா.? அண்ணாமலைக்கு மீண்டும் கெடு விதித்த செந்தில் பாலாஜி

By Ajmal KhanFirst Published Dec 20, 2022, 1:28 PM IST
Highlights


அண்ணாமலை சொத்து விவரங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை வெளியிட்டு பேரணியாக செல்ல வேண்டிய அவசியம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது கை கடிகாரம் வாங்கியதற்கான பில்லை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா என கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000  இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,  இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப ஆட்சிக்கு வந்ததும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறினார். ஏற்கனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கி உள்ள நிலையில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்போ புகழ்ந்தது பல்வளத்துறை அமைச்சர்; அடுத்தது என்ன மின்துறை அமைச்சரா? அண்ணாமலை கேள்வி!!

1.70 கோடி பேர் ஆதார் எண் இணைப்பு

தற்போது வரை 34,134 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 பேருக்கு பொங்கலுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மின் இணைப்பு உடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் 1 கோடியே 70 லட்சம் பேர் நேற்று வரை இணைத்துள்ளனர். தற்போது  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு எடுக்க உள்ளார்கள். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். தற்போதைய மின் தேவை 2021 ம் ஆண்டில் 32000 மெகாவாட் உற்பத்தி தேவையாக உள்ளது 2030 ஆண்டிற்குள் 65 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்ற வருவதாக தெரிவித்தார்.

மக்களுக்காக போராட்டம் நடத்துவது போல் நாடகமாடிய திமுக.!ஆட்சிக்கு வந்ததும் மக்களின் குரல்வளையை நெரிப்பதா.?சீமான்

மின் தேவை அதிகரிப்பு

இது தற்போதையுள்ள தேவையை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரிவித்தார். மத்திய அரசு நிலக்கரி இறக்குமதிக்கு நிர்ணயம் செய்துள்ள விலையை விட குறைந்த அளவில் தமிழக அரசு நிலக்கரியை 133 டாலர் தான்  இறக்குமதிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அரசு சிறப்பாகவும் பல்வேறு துறைகளும் வெளிப்படையாக செயல்பட்டு வரும் நிலையில்  தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் பாஜக தலைவர் பேசிய வருவதாக குற்றம் சாட்டினார் . நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான்.  தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின்னரா என்றால் பில்லை காட்ட சொல்லுங்கள்.

போலி பில் தயாரிப்பா..?

மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. மடியில் கணம் உள்ளது. பாஜகவினர் வார் ரூம் போட்டு தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்ன குற்றம் சாட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த நபர் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும் எந்த கடையில் எந்த விலைக்கு வாங்கினார் என்று, ஆதாரத்தை வெளியிட வேண்டும். மேலும் அந்த கடிகாரம் யாரிடமோ வெகுமதி வாங்கியது என்றும் அதற்கான பில்லை இன்று மாலை வெளியிட வேண்டும் என சவால் விடுத்தார். அந்த கடிகாரத்திற்கான பில் தற்போது தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதனை வெளியிடும்போது அடுத்தகட்ட குற்றச்சாட்டுகளை தான் தெரிவிப்பதாக கூறினார்.

இதையும் படியுங்கள்

வாட்ச் பில்லை வெளியிட அண்ணாமலை தயங்குவது ஏன்.? கர்நாடக காபி கடை உரிமையாளர் பெயரில் ரசீதா.? திமுக கேள்வி

click me!