செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியாது..! கடுமை காட்டிய உச்சநீதிமன்றம்..!

Published : Oct 06, 2025, 01:37 PM ISTUpdated : Oct 06, 2025, 01:59 PM IST
senthil balaji

சுருக்கம்

"செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ஏன் டெல்லிக்கு மாற்றக் கூடாது?" - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லிக்கு மாற்றுவதில் எந்தவித ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.

போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக வழக்கின் தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்க கோரிய செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். 

செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு கோரி மூன்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். அப்போது இந்த விவகாரத்தில் ஜாமீன் வழங்கிய போது அவர் அமைச்சராக இல்லை, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை மாறாக வழக்கின் தன்மை குறித்தும் அதில் இருக்கக்கூடிய சாராம்சங்களை கருத்தில் கொண்டுதான் ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்பது வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது எனத் தெரிவித்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அவர் அமைச்சராக இல்லை என்ற கருத்தை நோக்கினாலும், அது தொடர்பாக எந்த ஒரு வார்த்தையோ அல்லது கருத்தோ குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதாக கருதப்படுமேயானால், அவரது ஜாமீன் மனுவை திரும்ப பெற நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது.

செந்தில் பாலாஜி இந்தவழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். எந்த ஒரு சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அவர் கலைக்கவோ அல்லது அழுத்தம் கொடுக்க முற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜாமீன் நிபந்தனைகளை அவர் கடைபிடித்து வருகிறார். 

எந்த வகையிலும் மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் தற்பொழுது இருக்கும் கேள்வி என்னவென்றால் ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் அமைச்சராக இருக்கக்கூடாது? என நீதிமன்றம் கூற முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் தரப்பில் தனது நிலைப்பாட்டை தெளிவாக வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் எந்தவொரு மாற்றுக்கருத்தோ குழப்பமோ இருக்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!