150 நாட்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு கேட்டு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது பல கட்டங்களை கடந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தது. இருந்த போதும் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வருகிறார். அதே நேரத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதீமன்றத்தில் பல முறை ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
undefined
செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு
இதனையடுத்து அடுத்த கட்ட முயற்சியாக தற்போது உச்சநீதிமன்றத்தை செந்தில் பாலாஜி நாடியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி இந்த ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விசாரணையை இன்று (20நவம்பர்) ஒத்திவைத்தனர். எனவே இந்த ஜாமின் மனு வழக்கானது இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாமின் மனு இன்று விசாரணை
இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்குவது குறித்து ஓரிரு நாளில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் ஜாமின் கிடைக்குமா.? என்ற எதிர்பார்ப்பில் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளனர்.
இதையும் படியுங்கள்
முதல்வர் கனவில் அண்ணாமலை... தண்ணி தெளிச்சு விடுங்க... பங்கமாகக் கலாய்த்த எஸ்.வி.சேகர்