
தேனி மாவட்ட கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோரின் வாட்ஸ் அப் குரூப்புக்குள்ளே ஒரு ஷாக் விவகாரமொன்று இன்று பரபரப்பாக ஷேர் ஆகிக் கொண்டிருக்கிறது. அது இதுதான்...
அம்மாவட்ட முக்கிய கல்வி அலுவலகத்தை சேர்ந்த ஒரு சீனியர் மனிதர் , புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆய்வக உதவியாளர்கள் அனைவரையும் அழைத்து ‘உங்க நியமனம் தொடர்பா நிறைய பேரு வழக்கு போட்டிருக்காங்க.
அதை எதிர்கொள்றதுக்கு வக்கீல் செலவு அதுயிதுன்னு ஆகுது. அதனால ஆளுக்கு ஆயிரம் ரூபா கொடுங்க.’ என்று வசூல் பண்ணியிருக்கிறாராம். சுமார் அறுபது பேரிடம் இப்படி கறந்திருக்கிறாராம்.
வழக்கு போட்டது யார்? இவர் ஏன் அதை சமாளிக்கணும்? என்று ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வேறு வழியில்லாமல் பணத்தை கொடுத்துவிட்டார்களாம் பணியில் சேர்ந்தவர்கள்.
தேனி மாவட்ட வாட்ஸப் குரூப்பின் இந்த தகவல்கள் அப்படியே சென்னை டீமுக்கும் பரவ, அவர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கவனத்துக்கு இதை கொண்டு சென்றிருக்கிறார்கள்.
கடுப்பான மிஸ்டர் செங்ஸ், ‘இது உண்மையான்னு விசாரிங்க. வதந்தியா இருந்தால் விட்டுட வேண்டாம். ஒருவேளை உண்மையா இருந்தால் நடவடிக்கை எடுக்கணும். இல்லேன்னா இந்தாளை பார்த்து மற்ற மாவட்டங்கள்ளேயும் சிக்கல்கள் உருவாகிட போகுது.’ என்றாராம்.
’தேனி மாவட்டம்னாலே சிக்கலாதான் இருக்கும் போலிருக்குதுங்க சார்.” என்று அமைச்சரிடம் டைமிங்காக ஜோக் அடித்திருக்கிறார் அவர் துறையின் சீனியர் அதிகாரி ஒருவர்.
இருங்க இருங்க பன்னீர் வரட்டும்...