
ஜெ. மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் சசிகலாவை முதல்வராக விடமாட்டோம் என்றும் அறைகூவல் விடுத்தனர் பி.எச் பாண்டியன் மற்றும் அவர் மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர்.
அவர்களது பத்திரிகையாளர் சந்திப்புக்கு பதிலடி கொடுக்கும் பகையில் செங்கோட்டையனும் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "பி.எச்.பாண்டியன் அதிமுகவுக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் என்று குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா மீது முதன் முதலில் வழக்கு தொடர்வதற்கு காரணமானவரே பி.எச் பாண்டியன்தான் என்று செங்கோட்டையன் கடுமையாக சாடினார்.
தேவையற்ற வதந்திகளை மனோஜ் பாண்டியன் பரப்புகிறார்.
பி.எச் பாண்டியன் குடும்பத்தில் ஒட்டுமொத்தமாக 5 பேருக்கு அரசு பதவிகள் அளிக்கபட்டிருக்கிறது.
அந்த நன்றி விசுவாசம் கூட இல்லாமல் பி.எச்.பாண்டியன் செயல்படுகிறார் என்றும் விசுவாசம் இல்லாதவர் எனவும் சாடினார்.
எதிரிகளோடு கைகோர்த்து கட்சிகளில் குழப்பம் விளைவிக்கும் குழப்பவாதி எனவும் பி.எச்.பாண்டியன் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.