"சசிகலா இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்கலாம்" - ஆளுநர் அதிரடி..

Asianet News Tamil  
Published : Feb 07, 2017, 02:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
"சசிகலா இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்கலாம்" - ஆளுநர் அதிரடி..

சுருக்கம்

தமிழக முதலமைச்சராக  சசிகலா பதவியேற்றுக் கொள்வதில்  உள்ள சிக்கல்கள்  குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பதவியேற்றுக் கொள்வதற்கு அவர் இன்னும் ஒரு வாரம் காத்திருப்பதில் தவறில்லை என்றும் வித்யாசாகர் ராவ் கருத்துத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ்சின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட வித்யா சாகர் ராவ், புதிய முதலமைச்சர் பதவியேற்றுக் கொள்ளும் வரை அவரே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ், நேற்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் இதனைத் தொடர்ந்து  மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,  ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோருடன் வித்யாசாகர் ஆலோசனையில் ஈடுபட்டார். சொத்து குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வர உள்ள நிலையில், சசிகலா பதவி ஏற்றுக்கொள்வது குறித்து என்ன சட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவிஏற்பதில் சட்ட சிக்கல் உள்ளதா என்பது குறித்து அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி மற்றும் சட்ட நிபுணர்கள் ஆகியோருடனும்  ஆலோசனை நடத்தினார் என கூறப்படுகிறது.

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று காலை, கோவை பாரதியார் பல்கலையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதாக  இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கோவை வராமல்  டில்லியிலிருந்து நேரடியாக  மும்பை சென்றதோடு மட்டுமல்லாமல் , ஊட்டியிலிருந்த அவரது குடும்பத்தினரையும் மும்பைக்கு வரவழைத்தார்.

இந்நிலையில், கவர்னரின் சென்னை வருகை ரத்தானதால், சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி எப்போது என்பது தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது.

இதனிடையே சட்ட சிக்கல்கள் எல்லாம் முடிவடைந்த பின் பதவியேற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும் அதற்கு ஒரு வாரம் சசிகலா பொறுத்திருக்கலாம் என்றும் ஆளுநர் கருத்துத் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

டி20 உலகக் கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் வீரர்களின் நாடகம்... சுக்குநூறாக உடைத்த இங்கிலாந்து வீரர்..!
இனி விசிலு பறக்கும் பாரு.! ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு லட்சம் விசில்கள்.?! அடித்து விளையாடும் விஜய்.! இப்படி பண்றீங்களேப்பா.!