
அம்மா வேறு நீங்கள் வேறு. அம்மாவுக்கு கிடைக்கும் அதே வரவேற்பு உங்களுக்கும் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள் என தினகரனை எச்சரித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
பகல் நேரத்தில் பிரச்சாரம் செய்வது வீண். அதனால் மாலை 5 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் போதும். அம்மாவும் அப்படிதான் செய்வார்கள் என்று தொண்டர்களிடம் கூறி வந்தார் தினகரன்.
அதேபோல், மாலை 5 மணிக்கு மேல்தான் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து வந்தார் தினகரன்.
ஆனால், அம்மாவின் பார்முலா மற்றவர்களுக்கு ஒத்து வராது. அவர் ஒரு தொகுதிக்கு ஒரு தடவை போனால் போதும். மேலும் அம்மா பகலில் வரவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
ஆனால், அம்மாவின் பாணி, உங்களுக்கு பொருந்தாது என்று நைசாக தினகரனிடம் சொல்லி புரிய வைத்திருக்கிறார் செங்கோட்டையன்.
அதனால், இப்போதெல்லாம் காலையிலேயே பிரச்சாரத்திற்கு புறப்பட்டு விடுகிறார் தினகரன். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்றும் அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
இது தினகரன் ஆதரவாளர்களையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.