பட்டாசு, வெடி கிளப்ப போகும் செந்தில் பாலாஜி கோஷ்டி!! அதகளமாக காத்திருக்கும் அறிவாலயம்...

Published : Dec 14, 2018, 10:43 AM IST
பட்டாசு, வெடி கிளப்ப போகும் செந்தில் பாலாஜி கோஷ்டி!! அதகளமாக காத்திருக்கும் அறிவாலயம்...

சுருக்கம்

இன்று செந்தில் பாலாஜி திமுகவில் இணைய  இருப்பதால், அறிவாலயத்தில் வந்தடைந்த ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட தயாராக உள்ளனர்.

முன்னாள் அமைச்சரும் அமமுகவின் முக்கிய பிரமுகருமாக இருந்த செந்தில் பாலாஜி  இன்று சென்னை அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்  இணைய உள்ளார். இதற்கான  ஏற்ப்பாடுகள் தடபுடலாக  நடந்து வந்தது. முதலில் செந்தில் பாலாஜி திமுகவில் இன்று இணைவதாக இருந்தது.  தனியாக வந்து சேருவதை விட ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தை அதிரும் வகையில் திருவிழாவாக இருக்க வேண்டும் என்பதால் சுமார் 2௦௦௦ பேரை திரட்ட முடிவு செய்திருந்தார்.

இதையடுத்து அவர் இன்று தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுகவில்  இணையும் அவர், இதற்காக கரூரில் இருந்து  இதனையடுத்து நேற்று காலை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள்  50  வேன்களிலும், 100 கார்களிலும் 2000 பேருக்கு மேல் சென்னைக்கு கிளம்பியிருக்கிறார்கள்.  

நேற்று இரவே சென்னையை வந்தடைந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை சென்னையில் இருக்கும் நிர்வாகிகள் சிலர், அவர்களுக்கு தாங்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்று காலை முதல் சாரை சாரையாக அறிவாலயம்  நோக்கி வரும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பட்டாசு என அறிவாலயத்தை அதகளப்படுத்த இருப்பதால் தேனாம்பேட்டை ஏரியாவே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!