சிவசேனா எம்எல்ஏக்களை இங்க வர சொல்லுங்க..சிறப்பா கவனிச்சி அனுப்புறோம்.." பாஜகவை போட்டுதாக்கும் வங்கப்புலி மம்தா

By vinoth kumarFirst Published Jun 24, 2022, 9:57 AM IST
Highlights

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இன்று நீங்கள் அதிகாரத்தில் இருக்கலாம். பணத்தையும், பலத்தையும், மாஃபியாக்களையும் பயன்படுத்தலாம். ஆனால், ஒருநாள் நீங்கள் செல்ல வேண்டிய நேரம் வரும்.

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை அசாமுக்கு அனுப்பியதற்கு பதிலாக மேற்கு வங்கத்துக்கு அனுப்புங்கள் நன்றாக கவனித்து அனுப்புகிறோம் என முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாக தெரிவித்தள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  மகா விகாஷ் அகாடி எனும் இந்த கூட்டணி ஆட்சி மீது சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பை காட்டும் விதமாக அவர்கள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி உள்ளனர். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். 

சிவசேனா கட்சிக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவசேனாவின் 40 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் 6 பேரும் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக வெறும் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னால் பாஜக அரசு இருப்பதாக ஆளும் ததரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து பாஜகவை மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது. இந்தத்துவாவுக்காகப் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேவை நிர்பந்திக்கின்றனர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இன்று நீங்கள் அதிகாரத்தில் இருக்கலாம். பணத்தையும், பலத்தையும், மாஃபியாக்களையும் பயன்படுத்தலாம். ஆனால், ஒருநாள் நீங்கள் செல்ல வேண்டிய நேரம் வரும். அப்போது, யாரேனும் உங்கள் கட்சியையும் உடைக்கலாம். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை அசாமுக்கு அனுப்பியதற்கு பதிலான மேற்கு வங்கத்துக்கு அனுப்பிங்கள் நன்றாக கவனித்து அனுப்புகிறோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

click me!