
ஓபிஎஸ்சுக்கு முன்னாள் அமைச்சர் செம்மலை ஆதரவளித்திருப்பதால் மிக பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் தொகுதி எம்எல்ஏவான செம்மலை கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி ஓடி வந்து ஓபிஎஸ் இல்லம் அமைந்திருக்கும் கிரீன்வேஸ் சாலைக்கு வந்து அங்கு தான் செம்மலை எம்எல்ஏ வந்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு உள்ளே சென்று ஆதரவளித்திருக்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வரவிருக்கும் நிலையில் சசிகலா மலை போல் நம்பியிருக்கும் செம்மலையே ஓபிஎஸ்சிடம் அடைக்கலமாகியிருப்பதால் இடி இறங்கியது போல் பாதிப்பில் உள்ளனர் சசிகலா தரப்பினர்.
விஐபி எம்எல்ஏவும் அதிமுக அமைப்பு செயலாளருமான் செம்மலையே ஓபிஎஸ்சிடம் வந்து விட்டதால் குறைந்த பட்சம் நாற்பது எம்எல்ஏக்களாவது ஓபிஎஸ் பக்கம் வருவார்கள் என்பது உறுதி,.
காரணம் செம்மலை சசிகலாவின் சொல்கேட்டு மீடியாக்களில் ஓபிஎஸ்சை கடுமையாக சாடி வந்தார். இப்படி ஓபிஎஸ்சை சாடி வந்த செம்மலையே வந்திருப்பதால் ஓபிஎஸ் ஆதரவு மனநிலை மற்றும் மதில் மேல் பூனையாக இருந்த எம்எல்ஏக்கள் இங்கு வரக்கூடும் என்பதால் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.