
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த பெங்களூரு தனிநீதிமன்றம், 4 ஆண்டுகள் தண்டனையும, ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்தசெய்தது. இ்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுமீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.
வழக்கு கடந்த வந்த பாதை:-
1996, ஜூன் 16-
1991 முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.68 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்ததாக சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் அப்போதைய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார்.
1996, ஜூன் 27: விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிபதி உத்தரவு
1996, செப்.7: வழக்கின் விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமனம்
1996, செப். 18: ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு, அடுத்த நாள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் வீடுகளில் போலீசார் சோதனை.
1996, டிச.7: ஜெயலலிதா கைது- ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
1997- சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னையில சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட உறவினர்கள் மீது விசாரணை தொடக்கம்
1997, ஜூன்4- சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
2001, மே15: தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
2001, செப் 21: ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவிப்பு
2002, பிப்.21: ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று,முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்பு
2003: ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றதால் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் கே.அன்பழகன் சார்பில் மனு
2003,நவ.18: சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு
2005, பிப்.19: சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநில அரசு சார்பில் வாதாட சிறப்பு வழக்கறிஞராக பி.வி. ஆச்சார்யாவை நியமித்தது கர்நாடக அரசு.
2011, அக்-நவ: சிறப்பு நீதிமன்றம் கேட்ட 1,339 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்தார்.
2012, ஆக.12: வழக்கில் தொடர்ந்து பணியாற்ற முடியாது எனக்கூறி பி.வி. ஆச்சார்யா திடீர் ராஜினமா. 2013, ஜனவரியில் விலகினார்.
2013, பிப்.2: சிறப்பு வழக்கறிஞராக ஜி. பகவான்சிங்கை கர்நாடக அரசு நியமித்தது.
2013, ஆக.26: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை இல்லாமல் ஜி. பகவான் சிங்கை நியமித்ததாகக் கூறி அவரின் நியமனத்தை மாநில அரசு வாபஸ் பெற்றது
2014, ஆக.28: சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரனை முடிந்து, தீர்ப்பு செப்.20ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேரையும் தீர்ப்பு நாள் அன்று நேரில் ஆஜராக நீதிபதி குன்ஹா உத்தரவு
2014, செப். 16: தனி நீதிமன்றம் தீர்ப்பை செப்.27ந்தேதிக்கு மாற்றியது.
2014,செப். 27: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு. 4 ஆண்டுகள் சிறையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
2014, செப்.29: ஜாமின் கோரி, ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.
2014, அக்.7: கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
2014,அக். 9: ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்
2014,அக்.17: உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட4 பேருக்கு ஜாமின் வழங்கியது.
2014, டிச.18: கர்நாடக உயர் நீதிமன்றம் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையை நாள்தோறும் நடத்தி 3 மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
2015, ஜன.1: மேல்முறையீட்டு மனுக்களை விசாரணை செய்ய தனி நீதிபதியாக குமாரசாமி நியமனம்.
2015, ஏப்.28: சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சார்பில் சிறப்பு வழக்கறிஞராக மீண்டும் பி.வி.ஆச்சார்யா நியமனம்.
2015, மே.11: சொத்துக் குவிப்பு வழக்கி்ல் இருந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமராசாமி தீர்ப்பளித்தார்.
2015, ஜூன்23: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
2015, ஜூலை 17: கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டு ஜெயலலிதா உள்ளிட்ட4 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
2016, பிப்.23: ஜெயலலிதா, உள்ளிட்ட4 பேர் விடுதலையானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது.
2017, ஜூன் 7: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
2016, டிச.5: முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னையில் திடீர் மரணம்.