
உச்ச நீதிமன்றம் இன்று வழங்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை எதிர்பார்த்து, தமிழகம் மட்டுமின்றி இந்த நாடே பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
வக்கீல்கள் வாதம்
மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது ஜெயலலிதா சார்பில், மூத்த வக்கீல் எல்.நாகேஸ்வரராவ் (தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி), மற்றொரு மூத்த வக்கீலான சேகர் நாப்தே ஆகியோர் ஆஜராகி, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக வாதாடினார்கள்.
கர்நாடகா அரசு சார்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, சித்தார்த் லூத்ரா, பி.வி.ஆச்சார்யா ஆகியோர் கர்நாடகா அரசு சார்பிலும், மூத்த வக்கீல்கள் டி.ஆர்.அந்தியர்ஜுனா, விகாஸ்சிங் ஆகியோர் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் ஆஜராகி, உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும்படி வாதாடினார்கள்.
3 வாய்ப்புகள்
வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், சட்டரீதியான வழியில் சொத்துகள் சேர்த்து இருந்தால் அது ஒரு குற்றமல்ல என்ற கருத்து தெரிவித்து இருந்தனர்.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்கள் கோடிட்டு காட்டி இருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் முன்பு 3 வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி இருந்தனர்.
விடுதலையாகலாம்?
அதன்படி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை (விடுதலை) உறுதி செய்யலாம், அல்லது நிராகரிக்கலாம்; அல்லது அனைத்து சாட்சிகளையும் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடலாம்.
அத்துடன், இந்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே அனுப்பி வைத்து மீண்டும் பரிசீலிக்க உத்தரவிடலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.