
மேட்டூர் அணை தூர் வாரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை எனவும், இந்த நிகழ்வுக்கு நான் சென்றிருந்தால் அவமான படுத்த பட்டிருப்பேன் எனவும் செம்மலை எம்.எல்.ஏ சாடியுள்ளார்.
கடந்த 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மேட்டூர் அணையில் தூர் வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூர் வாரி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சரோஜா, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் தங்கள் விருப்பம்போல் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கபட்டுள்ளதாகவும், விவசாயிகள் அல்லாதோர் மணல் அள்ளினால் தகுந்த நடவடிக்கை சட்ட ரீதியாக எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து இன்று மேட்டூரில் ஒ.பி.எஸ் அணியின் செம்மலை எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மேட்டூர் அணை தூர் வாரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை எனவும், சில அதிகாரிகள் கேட்டுகொண்டதின் பேரில் நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்த்தேன் எனவும் கூறினார்.
தூர்வாரும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தால் அவமானபடுத்தப் பட்டிருப்பேன் எனவும், பனமரத்துபட்டியில் விவசாயிகள் என்ற பேரில் லாரிகளில் செம்மண் எடுக்கபடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள் மண் எடுப்பதை யார் கண்காணிக்க போகிறார்கள் என்றும், ஒரு லாரி வண்டல் மண் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யபடுவதாகவும், தெரிவித்தார்.