"தொகுதி மக்களின் கருத்தை கேட்டு எடப்பாடியை ஆதரியுங்கள்" - அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு செம்மலை கோரிக்கை

 
Published : Feb 16, 2017, 05:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
"தொகுதி மக்களின் கருத்தை கேட்டு எடப்பாடியை ஆதரியுங்கள்" - அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு செம்மலை கோரிக்கை

சுருக்கம்

சசிகலா ஆதரவு அதிமுகவினர் எடப்பாடி தலைமையில் பதவியேற்ற நிலையில் அவருக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்கள் ஒருமுறை தொகுதிக்கு சென்று பொதுமக்கள் கட்சிகாரர்கள் கருத்தை கேட்ட பின் எடப்பாடியை ஆதரியுங்கள் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு செம்மலை கோரிக்கை வைத்துள்ளார்.

அதிமுக ஓபிஎஸ் சசிகலா அணி என இரண்டாக பிரிந்து யார் முதல்வர் என்பதில் போட்டியிட, பொதுமக்கள் கட்சிக்காரர்கள் ஓ.பி.எஸ் முதல்வராக வர ஆதரவு தெரிவித்த நிலையில், எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோர, அவருக்கு பதவி ஏற்க ஆளுநர் அனுமதி அளித்தார்.

இந்நிலையில் 31 அமைச்சர்களுடன் எடப்பாடி பதவி ஏற்றார். அவர்கள் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஓ.பி.எஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் செம்மலை, ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.

அதில், வாக்களித்த மக்களின் எண்ணங்களுக்கு மாறாக அதிமுக தொண்டர்களின் எதிர்ப்புக்கு இடையே புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது.

எம்.எல்.ஏக்கள் இந்த ஆட்சியை ஆதரிக்கும் முன் ஒருமுறை உங்கள் தொகுதிக்கு சென்று பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் கருத்தை கேட்ட பின் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!
தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!