மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் உற்சாக வரவேற்பு அளித்தது ஏன்..? செல்லூர் ராஜூ கூறிய புதிய தகவலால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Aug 7, 2022, 3:22 PM IST

வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை  சோதனைக்கு பயந்தே பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்ததாக  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்


மோடியை வரவேற்றது ஏன்..?

மதுரையில் திமுக,பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி  ஏராளமானோர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் கே.ராஜு, ஒன்றிய பிரதமர் என கூறி வந்த தமிழக முதல்வர் தற்போது இந்திய பிரதமர் என கூறி வரவேற்கின்றார். சென்னையில் நடைபெற்ற செஸ் போட்டி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது ஏன் இந்த முறை நரேந்திர மோடியை  ஒன்றிய பிரதமர் என  முதலமைச்சர் ஸ்டாலின் அழைக்கவில்லை என கேள்வி எழுப்பினார் ? வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பயந்தே தமிழக முதல்வர், இந்திய பிரதமரை வரவேற்பு அளித்ததாகவும் குற்றம் சாட்டினார். ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அதிமுக கட்சியில் இணைவது குறித்த கேள்விக்கு ? அதிமுகவின் கொள்கை ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பிடித்ததால் எங்களது கட்சியில் இணைவதாகவும் கூறினார். திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் அக்கட்சியினரே திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தற்போது இணைந்து வருவதாகவும் கூறினார். 

Tap to resize

Latest Videos

எடப்பாடி பழனிசாமி- ஸ்டாலின் ரகசிய கூட்டு...! இபிஎஸ் அணியினரை அலற விடும் அதிமுக முன்னாள் எம்.பி

திட்டங்களை முடக்கி வைக்கும் பிடிஆர் 

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனக்கான கமிஷன் தொகை கிடைக்காததால் ,மதுரையில்  பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளதாகவும் செல்லூர் ராஜு குற்றச்சாட்டினார். நிதித்துறை மற்றும் வணிகவரித்துறை ஆகிய இரண்டு அமைச்சர்களும் மதுரையின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் வேண்டும் என கேட்டுக்கொண்டார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு முறை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம் அப்போது கேரள அரசு எங்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அண்டை மாநிலம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கொடுக்கும் நெருக்கடியை  மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சமாளிக்க முடியவில்லை என கூறினார்.  ரூல்கரவ் திட்டத்தின் மூலம் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

சசிகலா,தினகரனுடன் இணைந்து செயல்படுமாறு கூறினாரா ஓபிஎஸ்..? திடீர் விளக்கம் அளித்த தேனி மாவட்ட செயலாளர்

click me!