அமைச்சருக்கும் தான் பிளைட் ஓசி, கார் ஓசி, டிரைவர் ஓசி, வீடு ஓசி...! பொன்முடியை அலறவிடும் செல்லூர் ராஜூ

Published : Oct 02, 2022, 01:54 PM IST
அமைச்சருக்கும் தான் பிளைட் ஓசி, கார் ஓசி, டிரைவர் ஓசி, வீடு ஓசி...! பொன்முடியை அலறவிடும் செல்லூர் ராஜூ

சுருக்கம்

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.இடம் இருந்து விடுதலை பெற்றால் தான் மக்கள் பணிகளை சரியாக கவனிக்க முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  

பேருந்து கட்டண உயர்வு

மதுரையில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார். தீபாவளி வர உள்ளதால்,  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கையை தற்போதே தமிழக அரசு தொடங்க வேண்டும்.  முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். விழா காலங்களில் அரசு பேருந்துகள் , ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை  அரசு அனைத்து தரப்பினருடன் பேசி   நிர்ணயம் செய்ய வேண்டும்.  ஆம்னி பேருந்துகளின் தற்போதைய  கட்டண உயர்வால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு அதிக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்..

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி கொடுக்க கூடாது..! மதவாத தீய சக்திகள் தலை தூக்கும்..! அலறும் பாஜக

அமைச்சர்களுக்கு அனைத்தும் ஓசி

தமிழக அமைச்சர்களுக்கு தற்போது வாய்கொழுப்பு அதிகமாகி விட்டது.  அமைச்சர்கள்,  மக்கள் வரி பணத்தில் தான் சலுகைகளை அனுபவிக்கின்றனர். அமைச்சர்கள் செல்லும் கார் ஓசி,  பணியாட்கள் ஓசி,  வீடு ஓசி,  என அனைத்தும் ஓசி,  மக்கள் வரி பணத்தில் தான் அமைச்சர்களுக்கு எல்லாம் ஓசி.  ஆனால் ஒரு அமைச்சர்,  பெண்களை பார்த்து ஓசி பயணம் என.வாய் கொழுப்பாக பேசுகிறார். எனவே தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இலவசம் என கூறாமல்,    விலையில்லா  மடிகணினி,  சைக்கிள் என பெயரிட்டு  அழைத்தார். எனவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம்  என்று உள்ளதை,  மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகள் என மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

காற்றில் பறந்த ஸ்டாலின் வாக்குறுதிகள்...! மேடைக்கு மேடை முழங்கிய மூன்று C க்கள் மட்டும் அமோகமாக உள்ளது- ஓபிஎஸ்

மேயரை சுதந்திரமாக செயல்பட விட வேண்டு்ம்

மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  அதிமுக ஆட்சியில் யானை பாகன் போல் செயல் பட்டார். ஆனால் தற்போது,  குதிரை ஓட்டியாக பயண்படுத்து கின்றனர். நல்ல மனிதாபிமானம் மிக்க IAS அதிகாரிகளை, நல்ல வகையில் பயண்படுத்த வேண்டும். தற்போது ரேசன் அரிசி கடத்தல் அதிகமாகி உள்ளது.  இந்த விசயத்தில் செயலாளர் ராதாகிருஷ்ணன் கைகள் கட்டப்பட்டு உள்ளது. போதை பொருள்  விற்பனை கடத்தல் ,   அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை முதல்வர் சர்வாதிகாரி யாக மாறவில்லை? மதுரை மாநாகராட்சி மேயரை முதலில் சுதந்திரமாக செயல்பட  அனுமதிக்க வேண்டும். நிதி அமைச்சர் பிடிஆர்  சொல்வதை தான் செய்ய வேண்டும் என செயல்படுகிறார். 

இதையும் படியுங்கள்

பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும்..! இல்லையென்றால்...? திமுக அரசை எச்சரிக்கும் எஸ்.பி.வேலுமணி

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?