வைகை அணை ரப்பர் பந்துகளால் மூடப்படும் - செல்லூர் ராஜுவின் அடுத்த ஐடியா

First Published Apr 22, 2017, 1:53 PM IST
Highlights
sellur raju planning to cover vaigai dam with rubber balls


வைகை அணையை தெர்மோகோல் மூலம் மூடும் திட்டம் தோல்வி அடைந்தததையடுத்து, ரப்பர் பந்துகளால் மூடப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

வைகை அணையின் நீர் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைகை அணையில் நீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதால் , அது ஆவியாகாமல தடுக்க தண்ணீர் மேல் தெர்மோகோல் அட்டைகளை மிதக்கவிடும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 10 லட்சம் ரூபாய் செலவில் தெர்மோகோல்  அட்டைகள் வாங்கப்பட்டு நேற்று வைகை அணைக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த அட்டைகளை செல்லோ மேப் மூலம் இணைத்து அமைச்சர் செல்லூர் ராஜு தண்ணீரில் மிதக்க விட்டார். மதுரை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்களும் இந்த விழாவில் பங்கேற்று அட்டைகளை மிதக்க விட்டனர்.

மேலும் அந்த அட்டைகள் படகுகள் மூலம் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மிதக்க விடப்பட்டன. ஆனால் சிறிது நேரத்தில் மிதக்க விடப்பட்ட அனைத்து அட்டைகளும் சுவற்றில் அடித்த பந்தைப் போல மீண்டும் கரைக்கே திரும்பி வந்தன. இந்த திட்டம் தோல்வி அடைந்ததையடுத்து ரப்பர் பந்துகள் மூலம் வைகை அணையை மூட நடவடிக்கை எடுப்படும் என தெரிவித்தார்.

click me!