
முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், முக்கிய நிகழ்ச்சியில் தூங்குவது முக்கிய செய்தியாக, எதிர்கட்சிகளின் கண்டனத்திற்கும் ஆளாகி விடுகிறது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர், எல்லா நிகழ்ச்சிகளிலும் தூங்கி வழிந்து விமர்சனத்திற்கு ஆளானவர்.
நாடாளுமன்ற கூட்டத்தில் கூட அவர் தூங்கி வழிந்ததை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்ட வரலாறு உண்டு.
அதேபோல், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் கூட பல முக்கிய நிகழ்ச்சிகளில் கொட்டாவி வீட்டுக் கொண்டே இருந்ததையும், தூங்கி வழிந்ததையும் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
அந்த பட்டியலில் இப்போது இடம் பெற்றிருப்பவர் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மாண்டியா மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், அவர், மூக்கு கண்ணாடி கழண்டு விழுவது கூட தெரியாத அளவுக்கு தூங்கி வழிந்துள்ளார்.
இந்த காட்சியை கன்னட ஊடகங்கள் அடிக்கடி ஒளிபரப்பி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளுடன் காரசாரமான விவாதங்கள் நடக்கும் போதே, அவர் தூங்கி விடுவார் என்றாலும், தற்போது அவர் அரசு விழாவில் தூங்கி வழிந்ததை எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதை எல்லாம் பார்க்கும்போது, நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.