டெங்குக்கு சாணி போதும்! உருப்படியான யோசனை சொன்ன 'தெர்மாக்கோல் பேமஸ்' செல்லூர் ராஜு!

 
Published : Oct 12, 2017, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
டெங்குக்கு சாணி போதும்! உருப்படியான யோசனை சொன்ன 'தெர்மாக்கோல் பேமஸ்' செல்லூர் ராஜு!

சுருக்கம்

Sellor Raju said good idea

வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் டெங்கு பாதிப்பு அதிகரித்தே வருகிறது. 

இந்த நிலையில், வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை, சோலை அழகுபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியையை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

வீடு வீடாக சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு, தண்ணீர் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வாசலில் சாணம் தெளித்தால், டெங்கு காய்ச்சல் வராது என்றார். பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட சாணம் தெளிக்கும் முறை, அதற்கான வசதியுள்ள மக்கள், அதனைத் தொடர வேண்டும் என்றார். 

சாணம் தெளிக்கப்படும் வீடுகளில் வீடுகளில், டெங்கு கிருமிகள் அண்ட விடாமல் தடுக்கலாம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

சாணம் தெளிப்பதால் டெங்கு கிருமிகள் அண்டாது என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதற்கு, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கிருமி நாசினியான சாணத்தை வீடு முன் தெளிக்கலாம் என்று அமைச்சர் கூறியதற்கு, இந்த ஒன்றைத்தான் அமைச்சர் உருப்படியாக கூறியிருக்கிறார் என்றும், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!