50 வருஷம் கழித்து அதே இடத்தில் பெரியாரை பழி தீர்த்த பாஜக...!! பெரியாரிஸ்டுகளை வம்புக்கு இழுத்து அதிரடி...!!

Published : Jan 24, 2020, 08:44 PM ISTUpdated : Jan 24, 2020, 08:58 PM IST
50 வருஷம் கழித்து அதே இடத்தில் பெரியாரை பழி தீர்த்த பாஜக...!!  பெரியாரிஸ்டுகளை வம்புக்கு இழுத்து அதிரடி...!!

சுருக்கம்

எந்த இடத்தில் ராமர் சீதை உருவத்தை செருப்பு மாலை போட்டு அவமதித்ததாக சொல்லப்படுகிறதோ ,  அதே இடத்தில் இன்று   ராமர் சீதை புகைப்படத்துடன் போலீஸ் தடையை மீறி  ஆன்மிக ஊர்வலம் செல்ல  முயன்று  கைதாகியுள்ளனர்.  

சேலத்தில் எந்த இடத்தில் ராமர் சீதா உருவப்படத்தை  பெரியார்  இழிவு செய்ததாக சொல்லப்படுகிறதோ,   அதே இடத்தில் ராமர்-சீதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பாஜக சார்பில் ஆன்மீக ஊர்வலம் ஊர்வலம்  நடத்தப்பட்டுள்ளது ,  அதில் ஜெய்ஸ்ரீராம்  முழக்கம் எழுப்பப்பட்டு  பெரியாரை மிகக் கடுமையாக விமர்சித்திருப்பது பெரியாரிஸ்டுகளை மீண்டும் வம்புக்கு இழுப்பதாக அமைந்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன்னர் துக்ளக்  இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ,  கடந்த 1971ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் சீதை ஆகிய இந்து தெய்வங்களின்  உருவத்தை நிர்வாணமாக கொண்டு சென்று பெரியார் அவமரியாதை செய்தார் என பேசினார் ,

 

பெரியாரின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அவரை அவதூறு செய்யும் வகையில் ரஜினிபேசுவதாக கூறி ரஜினிக்கு எதிராக தமிழகம் முழுவதிலும் கொந்தளிப்பு  ஏற்பட்டது.   அதிமுக - திமுக மற்றும்  பெரியாரிய அமைப்புகள் ஒரு சேர நடிகர்  ரஜினியை கண்டித்தனர் . பெரியார் மீது அவதூறு பரப்பியதற்கு  மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார் ,  ஆனால் தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என கூறிய ரஜினி,  மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்துவிட்டார்.  இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள பாஜக , பெரியார் எந்த இடத்தில் ராமர் சீதை உருவத்தை செருப்பு மாலை போட்டு அவமதித்ததாக சொல்லப்படுகிறதோ ,  அதே இடத்தில் இன்று   ராமர் சீதை புகைப்படத்துடன் போலீஸ் தடையை மீறி  ஆன்மிக ஊர்வலம் செல்ல  முயன்று  கைதாகியுள்ளனர். 

பெரியார் அவமதித்ததாக சொல்லப்படும்   சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டநிலையிலும் இன்று  அதே இடத்தில்  பாஜகவினர் ராமர்  சீதை புகைப்படங்களுடன் ஆன்மிக ஊர்வலம் செல்ல முற்பட்டனர்,   ஆனால் அதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்த நிலையிலும்  தடையை மீறி ஆன்மிக ஊர்வலம் நடத்தினர் .  அப்போது பேசிய பாஜாகவினர்,  பெரியாரை மிக கடுமையாக விமர்சித்ததுடன்  வடமாநிலங்களில் இந்து அமைப்புகள் வழக்கத்தில் கொண்டுள்ள ஜெய்ஸ்ரீ ராம் கோஷத்தையும்  எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் .  ராமர்- பெரியார் விவகாரம் சகஜ நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் பாஜகவினர் தடையை மீறி ஊர்வலம் நடத்தி இருப்பது பெரியாரை விமர்சித்திருப்பது,   பெரியாரிய இயக்கங்களை  வம்புக்கு இழுப்பதாக உள்ளது என பலரும்  விமர்சிக்கின்றனர்.  
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!