அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை மக்கிளடம் ஈடுபடவில்லை அதற்காக ஏதாவது பிரச்சனையை பாஜக கையில் எடுப்பதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என கூறினார்.
ஓதுவார் பயிற்சி- சான்றிதழ்
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 94 மாணவர்களுக்கு சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு , அறநிலையத்துறையின் சார்பில் ஆட்சி பொறுப்பேற்ற 28 மாதங்களில் 1030 திருக்கோயிலில் நன்னீராட்டு விழா நடந்தது. அதில் 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டில் 930 கட்டணமில்லா திருமணங்களை வசதி இல்லாதவர்களுக்கு நடத்தி வைக்கப்பட்டது
1000 ரூபாய் ஊக்கத்தொகை
2023-24 நிதி ஆண்டில் முதலமைச்சர் மேலும் 100 கோடி ரூபாயை மானியமாக வழங்குவதாக அறிவித்து 87 திருக்கோயிலில் 160 கோடி செலவில் திருக்கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ,திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு எந்தவொரு முன்னுரிமையும் இல்லாததை தொடர்ந்து அனைத்து அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கி இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அர்ச்சகர்களும் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருப்பதாக தெரிவித்தார். அந்த வகையில் இன்றைக்கு பயிற்சி பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற அர்ச்சகர்களும் 94 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாஜக செய்தி தொடர்பாளரா.?
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கோட்பாட்டின் கீழ் , இந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் கோயில்களில் மந்திரங்கள் செல்லும் போது பெரியார், கலைஞர் அண்ணா, முதலமைச்சரின் கனவுகள், சமூக நீதி பாதுகாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை தொடர்ந்து 1000 க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் எத்தனை கோயில்களுக்கு முதலமைச்சர் சென்றதாக தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர். தெலுங்கானாவுக்கும் புதுச்சேரிக்கும் தான் ஆளுநரே தவிர, தமிழக பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் அல்ல. இதை கேட்கின்ற தார்மீக உரிமை அவருக்கு இல்லை.
அவர் சார்ந்து இருக்கின்ற ஆளுநராக இருக்கின்ற மாநிலங்களில் இது போன்ற கும்பாபிஷேக நடவடிக்கையை முன்னெடுத்தால் இது போன்ற கேள்விகளை கேட்பதற்கு தகுதி உடையவர்களாக நினைக்கலாம். போகிற போக்கில் ஏதாவது சிண்டு முடிஞ்சு வைக்கும் வேலையை புதுச்சேரியிலும் தெலுங்கானாவிலும் வைத்துக் கொள்ள கேட்டு கொள்கிறேன் என்று கூறினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று கோயிலுக்கு சென்று பணியை செய்யும் போது எந்தவித பிரச்சனைக்கு அவர்கள் உள்ளானாலும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். என் மண், என் மக்கள் ஈடுபடவில்லை அதற்காக ஏதாவது பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறார்கள். சமத்துவத்தைப் பற்றி திமுக தொடர்ந்து பேசும். சனாதனத்தை பற்றி பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு. சமாதானம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்.
உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்
ஆர்ப்பாட்டம், போராட்டம் இவற்றின் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்றும், இது சமத்துவமான ஆட்சி. அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவம் பற்றி பேசும் உரிமை உண்டு. இது போன்ற போராட்டத்தை 45 ஆண்டாக சந்தித்து வருகிறேன். உருட்டல் மிரட்டலுக்கு பயந்து எங்கள் பணிகளை செய்யாமல் இருக்க மாட்டோம் முதலமைச்சரை பொறுத்தவரை 45 க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத் துறை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்று சேகர்பாபு கூறினார்.
இதையும் படியுங்கள்