சட்ட ரீதியாக தண்டனை கிடைக்காது... போட்டுத்தள்ளினாதான் சரி.. ஹைதராபாத் என்கவுன்டரை மீண்டும் ஆராதிக்கும் சீமான்!

By Asianet TamilFirst Published Dec 8, 2019, 9:25 PM IST
Highlights

 ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து சீமான் பேசிவருவது நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறியது பற்ர்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சீமான், “தம்பி ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை. நான் என் நாட்டுக்காகப் பேசி வருகிறேன்.” என்று சீமான் தெரிவித்தார்.
 

‘தர்பார்’ பட விழாவில் தன்னைப் பற்றி பேசிய நடிகர் ராகவா லாரன்ஸுக்கு நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் நாம்  தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டதை மக்கள் உணர்வுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளைச் சட்டரீதியாக அணுகினால் உடனடியாக நீதி கிடைக்காது. எனவேதான் இது போன்ற பிரச்னைகள் எழும்போது உடனடியாக தண்டனை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா போன்ற ஒரு பெரிய விவசாய நாட்டில் ஒரு வெங்காயத்தை மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை என்பது பெரிய அவமானம். நான் வெங்காயம், வெள்ளைபூண்டு சாப்பிடுவதில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்றே தெரியவில்லை. தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் எங்கள் வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள்” என்று சீமான் தெரிவித்தார்.


அப்போது,  ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து சீமான் பேசிவருவது நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறியது பற்ர்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சீமான், “தம்பி ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை. நான் என் நாட்டுக்காகப் பேசி வருகிறேன்.” என்று சீமான் தெரிவித்தார்.

click me!