வறுமை காரணமாக என் மக்கள் உரிமையை விற்கிறார்கள்!! சீமான் வேதனை..!

 
Published : Dec 25, 2017, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
வறுமை காரணமாக என் மக்கள் உரிமையை விற்கிறார்கள்!! சீமான் வேதனை..!

சுருக்கம்

seeman worry about people economic condition

ஓட்டுரிமையை காசுக்கு விற்கும் நிலையில்தான் மக்களின் நிலை உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 40707 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் அபார வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 21ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த முறையும் ஆளுங்கட்சியான அதிமுக தரப்பிலும் தினகரன் தரப்பிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதும் திமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பணநாயகம் வென்றுள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நமது முன்னோர்களால் ரத்தம் சிந்தி பெறப்பட்ட விடுதலை தற்போது எவ்வளவு கேவலமாக இருக்கிறது என வேதனை தெரிவித்தார்.

பணத்திற்காக ஓட்டுரிமையை விற்கும் அளவிற்கு மக்கள் வறுமையில் உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படாமல், ஓட்டுரிமையை பணத்திற்கு விற்கும் நிலையில்தான் மக்கள் உள்ளனர். எதிர்கால தலைமுறையை எச்சரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஜனநாயகத்திற்கு பேராபத்தாக பணநாயக கட்டமைப்பு திகழ்கிறது. இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த தலைமுறையை எச்சரிக்க வேண்டிய மாபெரும் கடமை ஊடகங்களுக்கும் உள்ளது என சீமான் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!