Seeman support : உதயநிதி துணை முதல்வர் ஆவார்.. அதை நான் வரவேற்கிறேன்.. திமுக அமைச்சர்களை விஞ்சிய சீமான்.!

By Asianet TamilFirst Published Dec 19, 2021, 9:52 PM IST
Highlights

திமுகதான் உண்மையான சங்கி. திமுகவில் தொண்ணூறு விழுக்காடு இந்துக்கள் உள்ளனர் என்று சொன்னது யார்? இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்களே. அது யாருடைய திட்டம்?

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதை நான் வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுகதான் உண்மையான சங்கி. அதனால்தான் காலணியை எடுத்துக் காட்டினேன். திமுகவில் தொண்ணூறு விழுக்காடு இந்துக்கள் உள்ளனர் என்று சொன்னது யார்? இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்களே. அது யாருடைய திட்டம்? ஆர்எஸ்எஸ், பிஜேபி திட்டம்தானே. தமிழ் தாய் வாழ்த்து பாடலை கருணாநிதி கொண்டு வந்தபோது அதிலிருந்து ஆரியம் போன்ற வார்த்தைகளை கட் செய்துவிட்டார். ஆனால், முழு பாடலையும் கொண்டுவர பாஜக சொல்கிறது என்றால் அதை பாராட்டத்தான் வேண்டும். நாங்கள் அதிகாரத்துக்கு வரும்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இருக்காது. வேறு பாடலை வைப்போம்.

 

தமிழக பாடநூல் புத்தங்களை அச்சிட வேறு மாநிலங்களுக்கு ஆர்டர் கொடுப்பது தேவையற்றது. 400க்கும் மேற்பட்ட நாம் தமிழர் பிள்ளைகளை சிங்கப்பூர் அரசு திருப்பி அனுப்பி உள்ளது, இதை ஏன் அவர்கள் செய்கிறார்கள் என்று புரியவில்லை. அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சிங்கப்பூரில் நாங்கள்சி வலிமையாக இருந்ந்தோம். தற்போது எங்கள் நடவடிக்கைகளை முடக்கி விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை திமுகவை நான் எதிர்ப்பேன். ஏனென்றால் பிரபாகரனுக்கு கருணாநிதியைப் பிடிக்காது. எனக்கு கருணாநிதியைப் பிடிக்காது. மத்தியில் பாஜக இவ்வளவு பெரும்பான்மையாக வெல்ல காரணமே காங்கிரஸ்தான். பத்து ஆண்டு காலம் கொடுத்த வாய்ப்பில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை நடத்தியிருந்தால் பாஜக ஏன் வரப்போகிறது. காங்கிரஸ் செய்த தவறால் பிறந்த குழந்தைதான் மோடி. தவறை செய்துவிட்டு மோடி வந்துவிட்டார் என்று சொன்னால் எப்படி?

உதயநிதியை துணை முதல்வர் ஆக்காதீர்கள் என்று நாம் சொன்னால் விட்டுவிடுவார்களா? அவர் வருவார். துணை முதல்வர் ஆவார். நாம் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டியதுதான். அவர் துணை முதல்வர் ஆவதை நான் வரவேற்கிறேன்” என்று சீமான் பேசினார். தமிழக அமைச்சர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சீமான், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஆதரவும் வரவேற்பும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!