"தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகதான் தேச துரோகி.." வெளுத்து வாங்கிய சீமான்

Asianet News Tamil  
Published : Mar 30, 2017, 02:47 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
"தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகதான் தேச துரோகி.." வெளுத்து வாங்கிய சீமான்

சுருக்கம்

seeman says that bjp is the anti national elemen

டெல்லியில் 17 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் சென்னு சற்தித்து தனத ஆதரவைத் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மானிய விலையில் உரம் வழங்க வேண்டும்,விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 17 நாட்களாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவர்கள் மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்துவது, பாடையில் படுத்து போராடுவது, தூக்கு கயிறை காழுத்தில் மாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, எலி கறி, பாம்புக்கறி  சாப்பிடுவது உள்ளிட்ட நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று வாயில் கறுப்புத் துணி கட்டி போராடி வருகின்றனர்.
 
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சந்தித்து வாழ்த்தத் தெரிவித்தார்.

அப்போது கென்யாவுக்கு அளிக்கும் நிதியை இந்திய விவசாயிகளுக்கு மோடி அளிக்கலாமே என்ற நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக ஹெச்,ராஜா நிருபரை தேச துரோகி என்று திட்டியதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார்.

தேச துரோகிதான் மற்றவர்களை அப்படி அழைப்பார்கள் என கடுமையாக பேசினார்.
தமிழக விவசாயிகளை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றிக்கு அமித் ஷா வகுத்துக் கொடுத்த 10 வியூகங்கள்..! பதற்றத்தில் மம்தா பானர்ஜி..!
முறிந்தது பாஜக- சிவசேனா கூட்டணி..! ஷிண்டே எடுத்த பகீர் முடிவு..! அமித் ஷா அதிர்ச்சி..!