நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுகவினர் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்திருந்தாலும், இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. டிடிவி தினகரனின் அமமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
undefined
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலையொட்டி, சூரம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு கருத்தையும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு கருத்தையும் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க..அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
மாற்றத்துக்கான விதையை ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் விதைப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 234 தொகுதிகளுக்கு செல்ல வேண்டி இருந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு நாள் மட்டும் செலவிட வேண்டி இருந்தது. ஆனால், இந்த முறை 12 நாட்களுக்கு மேல் தங்கி பரப்புரை மேற்கொள்ள உள்ளேன்.
தெருத் தெருவாக சுற்றி மக்களை சந்திப்பதுதான் எங்கள் தேர்தல் அணுகுமுறையாக இருக்கும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காசு ஏன் வாங்குறீங்கன்னு பெரியம்மா, சின்னம்மா கிட்ட கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள், ஏம்ப்பா அது எங்க காசுதானே, இவங்க யார் வந்தாலும் எதையும் செய்ய போறதில்லை.இந்த காசாவது கிடைக்கட்டுமே என்பார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். காசை வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன்.
ஆனால் ஓட்டை நாம் தமிழருக்கு போடுங்கள். இதுவரை எந்த அதிகார பதவிகளிலும் இல்லாத எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் பின்னர் உங்கள் தொகுதி எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள். தம்பி திருமகனை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு தெரியா ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். தம்பி திருமகன் ஈவெரா முதலில் நம் கட்சியில் இணைவதற்காக என்னை வந்து பார்த்தார்.
பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன சொன்னாரோ அவர் வரவில்லை. நானும் சரிப்பா நீ அங்கேயே இருந்து விடு என்றேன். அவர் இறந்ததில் எனக்கு மிகவும் துயரம். ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக இருந்த தம்பி திருமகன் இதுவரை மக்கள் பிரச்சினையை தீர்த்துள்ளாரா. அவரே தீர்க்க முடியாத போது அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் வந்து என்ன செய்துவிட முடியும் என்று கூறினார் சீமான்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமகன் ஈவேரா பற்றிய இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. டேய் எப்புட்றா என்றும், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்றும் பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க..இபிஎஸ். ஓபிஎஸ், டிடிவி தினகரன்..இபிஎஸ் போட்ட பிளான் - ஈரோடு கிழக்கு அதிமு வேட்பாளர் யார் தெரியுமா.?