கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச்சின்னம்.! கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கிறேன்- சீமான் அதிரடி

By Ajmal KhanFirst Published Jan 30, 2023, 2:32 PM IST
Highlights

மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

கடலில் பேனா நினைவு சின்னம்

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42 மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்தது. 

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

இந்தநிலையில் கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. கடல் வளம் பாதிக்கப்படும் என்றும் மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் 81 கோடி ரூபாயில் கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது வீண் செயல் என விமர்சிகப்பட்டது. இந்தநிலையில்,  தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக வரும் ஜனவரி 31ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்ததது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்க இருந்தனர். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எனது கருத்துகளை தெரிவிக்க இருப்பாக அறிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.

(1/2)

— சீமான் (@SeemanOfficial)

 

கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கிறேன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.சின்னக் கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேணி, சென்னை.நாள்: சனவரி 31, 2023 (நாளை)காலை 10.30 மணி நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகளும் பெருந்திரளாய்க் கலந்துகொள்ள இருக்கின்றனர். கடல் சூழலியல் குறித்த அக்கறையுள்ள அனைவரும் பங்குபெறலாம் என அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
காயத்ரி ரகுராமின் மார்பிங் புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி.! தொண்டர்களுக்கு திடீர் அட்வைஸ் சொன்ன அண்ணாமலை

click me!